வட தமிழகத்தை நோக்கி ‘டிட்வா’ புயல் நெருங்கி வருவதன் காரணமாக, சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, சென்னையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
‘டிட்வா’ புயலின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, இன்று (நவம்பர் 30) திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ‘சிவப்பு’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, சென்னை உட்பட மேலும் 9 மாவட்டங்களுக்கு மிகப் பலத்த மழைக்கான ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கையும் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், சென்னையின் அடையாளமான மெரினா கடற்கரை பகுதியில் கடல் சீற்றம் அதிகரித்துக் காணப்படுகிறது. கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதாலும், பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டும், மெரினா கடற்கரைப் பகுதிக்குள் மக்கள் செல்ல முற்றிலுமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடற்கரைக்குள் பொதுமக்கள் செல்லாதவாறு தடுப்புகள் அமைக்கப்பட்டு, காவல்துறை அதிகாரிகள் கண்காணிப்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். புயலின் தீவிரம் குறையும் வரை இந்தப் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடரும் எனத் தெரிகிறது.
Read More : நாளை முதல் ரூல்ஸ் மாறுது..!! இனி புதிய வாகனங்களை RTO அலுவலகத்திற்கு கொண்டு செல்ல தேவையில்லை..!!



