fbpx

மேலும் ஒரு மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை..!! குஷியில் மாணவர்கள்..!!

உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா கடந்த 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில், ஆருத்ரா தரிசன விழா தேரோட்டம் நேற்று (டிசம்பர் 26) கோலாகலமாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று (புதன்கிழமை) ஆருத்ரா தரிசன விழா நடைபெறவுள்ளது.

இதனை முன்னிட்டு அதிகாலை 2 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு மகாபிஷேகமும், 6 மணி முதல் 10 மணி வரை திருவாபரண அலங்காரமும், பஞ்ச மூர்த்தி வீதி உலாவும் நடைபெறுகிறது. பின்னர் மதியம் 2 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசனம் நடைபெறவுள்ளது. இந்நிலையில், விழாவை முன்னிட்டு கடலூர் மாவட்டத்திற்கு இன்று (டிசம்பர் 27) உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே நீலகிரி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

JN1 கொரோனா வைரஸ்..!! ஒரே வாரம் தான்..!! எச்சரிக்கும் மருத்துவர்கள்..!!

Wed Dec 27 , 2023
கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் முதன் முதலில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. அப்போதிலிருந்து இப்போது வரை இந்த வைரஸ் 70 லட்சம் மக்களை கொன்று குவித்துள்ளது. 70 கோடிக்கும் அதிகமானோரை பாதித்துள்ளது. இருப்பினும் இதற்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பு மருந்து பெரும்பலனை கொடுத்தது. கொரோனா வைரஸ் பல்வேறு திரிபுகளை அடைந்தாலும், இந்த தடுப்பு மருந்து ஓரளவுக்கு பலன் கொடுத்தது. ஆனால், தற்போது மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ளது. ‘ஜேஎன் […]

You May Like