ராஜ் பவன் அல்ல.. இனி மக்கள் பவன்.. தமிழ்நாடு ஆளுநர் இல்லத்தின் பெயர் மாற்றம்..!

Rajbhavan 2025

தமிழ்நாடு ஆளுநர் இல்லத்தின் பெயர் ராஜ்பவன் என்று அழைக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது மக்கள் பவன் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


கடந்த ஆகஸ்ட் மாதம் ஜனாதிபதி மாளிகையில் நடந்த ஆளுநர்கள் மாநாட்டில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி விடுத்த கோரிக்கையை ஏற்று ராஜ் பவன் என்ற பெயரை மாற்றி மக்கள் பவன் என அழைக்க மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. அதன்படி ‘ராஜ்பவன்’ என்று அழைக்கப்பட்டு வந்த ஆளுநர் இல்லம் மக்கள் பவன் என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஒன்றிய பிரதேசங்களில் உள்ள ஆளுநர் மாளிகை லோக் நிவாஸ் என அழைக்கப்படும். வளர்ச்சியடைந்த இந்தியா என்ற நோக்கத்தின் கீழ் ஜனநாயக அமைப்புகளில் மக்களின் பங்கேற்பை வலியுறுத்துவதே இந்தப் பெயர் மாற்றத்தின் நோக்கம் என்று மத்திய அரசு வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தை அடுத்து, ஆளுநர் மாளிகையின் லெட்டர் ஹெட்கள், பெயர்ப் பலகைகள், சமூக ஊடக கணக்குகள் ஆகியவற்றிலும் மக்கள் பவன் என பெயர் மாற்றப்படும்.

Read more: மாணவர்களுக்கு குட் நியூஸ்..!! நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!! எந்த மாவட்டத்தில் தெரியுமா..? ஆட்சியர் அறிவிப்பு..!!

English Summary

The name of the Tamil Nadu Governor’s Residence has been changed to Makkal Bhavan.

Next Post

காட்டுத் தீயாய் பரவும் புதிய வைரஸ்..!! தொட்டாலே கதை முடிஞ்சது..!! அலறும் அமெரிக்கா..!! இந்தியாவுக்கும் ஆபத்தா..?

Sun Nov 30 , 2025
உலகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்றில் இருந்து மீண்டு வந்துள்ள நிலையில், தற்போது அமெரிக்காவில் ‘நோரோவைரஸ்’ (Norovirus) என்ற மற்றொரு வைரஸ் பாதிப்பு சத்தமே இல்லாமல் வேகமாகப் பரவி வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது. சமீப வாரங்களாக இந்த வைரஸ் பாதிப்பு விகிதம் கணிசமாக உயர்ந்து, அந்நாட்டில் ஒரு புதிய சுகாதார சவாலை உருவாக்கியுள்ளது. இது பொதுமக்களிடையே இயல்பாகவே அச்சத்தை அதிகரித்துள்ளது. நோரோவைரஸ் என்றால் என்ன..? நோரோவைரஸ் என்பது இரைப்பைக் குடல் அழற்சியை […]
Norovirus 2025

You May Like