12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை..!! தாயிடம் கூறியதால் தலையை துண்டித்த கொடூரம்..!! சேலத்தில் அதிர்ச்சி..!!

Rape 2025 7

சேலம் மாவட்டம் தளவாய்பட்டி கிராமத்தை சேர்ந்த தினேஷ் குமார் என்ற ஓட்டுநர், வீட்டுக்கு பூப்பறிக்க வந்த பட்டியலிட சமூகத்தை சேர்ந்த 12 வயது சிறுமிக்கு தினேஷ்குமார் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி தன் தாயிடம் கூறியுள்ளார். இதனை அறிந்து ஆத்திரமடைந்த தினேஷ்குமார் கடந்த 2018 ஆம் ஆண்டு அக்டோபர் 22ஆம் தேதி வீட்டின் முன்பு அமர்ந்திருந்த சிறுமியின் தலையை துண்டித்து கொலை செய்துள்ளார்.


பிறகு சிறுமியின் தலையை தளவாய் பட்டி ஈச்சம்பட்டி சாலையில் வீசி உள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தினேஷ் குமாரை கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தினேஷுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. மரண தண்டனையை உறுதி செய்ய வழக்கு ஆவணங்கள் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதேசமயம் குற்றவாளி தினேஷ் தரப்பிலும் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் குற்றம் சாட்டப்பட்ட நபர் மனநிலை சரியில்லை என்று கூறி சட்டபூர்வ பாதுகாப்பை கோருவதற்கு உரிய மருத்துவ சான்றிதழ்கள் இல்லை, குற்றம் சாட்டப்பட்டவரின் செயல் கொடூரமானது என்ற போதும் இந்த வழக்கு அரிதிலும் அரிதானது அல்ல, குற்றம் சாட்டப்பட்டவருக்கு எந்த குற்ற பின்னணியும் இல்லை. குற்றம் சாட்டப்பட்டவர் சீர்திருத்தத்திற்கு அப்பாற்பட்டவர் அல்ல என்று கூறி தினேஷ்குமாரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து தீர்ப்பு வழங்கியது. அதேசமயம் அவருக்கு 20 ஆண்டுகளுக்கு எந்த ஒரு தண்டனை குறைவும் வழங்கப்படாது என்று நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

Read More : முதுநிலை ஆசிரியர் தேர்வில் அதிர்ச்சி..!! தமிழ் பாடத்தில் 85,000 பேர் தோல்வி..!! 20 மதிப்பெண் கூட வாங்கல..!!

CHELLA

Next Post

மீன ராசிக்கு சனி பெயர்ச்சி.. இந்த 5 ராசிக்காரர்கள் மிக கவனமாக இருக்க வேண்டிய நேரம் இது..!!

Sun Nov 30 , 2025
Saturn transits to Pisces.. This is the time for these 5 zodiac signs to be very careful..!!
Sunnakshatratransit2025effectonzodiactelugunews12 1

You May Like