மாதம் ரூ.30,000 வரை சம்பளம்..!! 8ஆம் வகுப்பு படித்திருந்தால் கூட போதும்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

tn govt jobs 1

தமிழ்நாடு அரசு பல்வேறு துறைகளில் காலிப் பணியிடங்களை நிரப்பி வரும் நிலையில், தற்போது திருப்பூர் மாவட்டத்தில் தேசிய சுகாதாரத் திட்டத்தின் கீழ் சுகாதாரத் துறையில் உள்ள 19 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ள நபர்கள் டிசம்பர் 12ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்பச் சுகாதார நிலையங்கள், மாவட்டச் சுகாதார அலுவலகம், திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் மாவட்ட சித்த மருத்துவ அலுவலகம் ஆகியவற்றின் கீழ் இந்தப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

19 காலிப் பணியிடங்களின் விவரங்கள் :

* யோகா மற்றும் இயற்கை மருத்துவம் சார்ந்த பதவிகள் (உதவியாளர் உட்பட)

* ஆயுஷ் மருத்துவ அதிகாரி

* மருந்து வழங்குபவர் (சித்தா)

* சிகிச்சை உதவியாளர்

* ஆடியோலஜிஸ்ட் (Audiologist)

* ஆடியோமெட்ரிக் உதவியாளர் (Audiometric Assistant)

* பிசியோதெரபிஸ்ட் (Physiotherapist)

* டேட்டா மேனேஜர் (Data Manager)

* பல் மருத்துவ உதவியாளர்

* மருத்துவமனை ஊழியர் (Hospital Staff)

கல்வித் தகுதியும் அனுபவமும் :

மருத்துவமனை ஊழியர் மற்றும் உதவியாளர் பணிக்கு 8ஆம் வகுப்பு படித்திருந்தாலே போதும். பல் மருத்துவ உதவியாளர் பணிக்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பிசியோதெரபிஸ்ட் பணிக்குத் தொடர்புடைய பட்டப்படிப்புடன் இரண்டு ஆண்டுகள் அனுபவம் தேவை.

டேட்டா மேனேஜர் பணிக்குத் தொடர்புடைய பிரிவில் முதுகலைப் பட்டப்படிப்புடன் ஓராண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும். ஆடியோமெட்ரிக் உதவியாளர் பணிக்கு டிப்ளமோ படிப்பும், ஆடியோலஜிஸ்ட் பணிக்கு இளங்கலைப் பட்டப்படிப்பு அல்லது 12ஆம் வகுப்பு தேர்ச்சியும் அவசியம்.

மாத சம்பளம் :

தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்குப் பதவிக்கு ஏற்ப மாதச் சம்பளம் மாறுபடும். இதில் ஆயுஷ் மருத்துவ அதிகாரிக்கு ரூ.30,000, பிசியோதெரபிஸ்ட் மற்றும் ஆடியோலஜிஸ்ட் பணிக்குத் தலா ரூ.23,000, பல் மருத்துவ உதவியாளர் பணிக்கு ரூ.20,000, மருத்துவ ஊழியர் பணிக்கு ரூ.13,800 வரையிலும் சம்பளம் வழங்கப்படும்.

முக்கிய அறிவிப்பு : மேற்கண்ட அனைத்துப் பணியிடங்களும் முற்றிலும் தற்காலிகமானவை என்றும், எந்தக் காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பணியில் சேருபவர்கள் இதற்கான சுயவிருப்ப ஒப்புதல் கடிதத்தை அளிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் tiruppur.nic.in என்ற இணையதளத்திற்குச் சென்று விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பப் படிவத்துடன், தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் சுயசான்றொப்பம் செய்யப்பட்ட நகல்களை இணைத்து, மாவட்ட நலவாழ்வுச் சங்கம், திருப்பூர் அலுவலகத்தில் டிசம்பர் 12ஆம் தேதி மாலை 5 மணிக்குள் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி :

நிர்வாகச் செயலாளர்/மாவட்டச் சுகாதார அலுவலர்,

மாவட்ட நலச்சங்கம்,

147 – பூலுவபட்டி பிரிவு, நெருப்பெரிச்சல் சாலை,

திருப்பூர் – 641 602.

விண்ணப்பங்கள் குறித்த சந்தேகங்களுக்கு 0421 2478503 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : திருவண்ணாமலை தீபத்தை நேரில் தரிசிக்க வேண்டுமா..? ஆன்லைனில் டிக்கெட் புக்கிங் செய்வது எப்படி..?

CHELLA

Next Post

தன் மகனுக்கு ’சேகர்’ என தமிழ் பெயரிட்ட எலான் மஸ்க்..! ஏன் தெரியுமா? அவரே சொன்ன விளக்கம்!

Mon Dec 1 , 2025
டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்X நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்க், தனது துணைவி மற்றும் Neuralink நிர்வாகி ஷிவோன் சிலிஸ்ள் பாதி இந்தியர் என்று தெரிவித்துள்ளார். மேலும், அவர்களுக்குப் பிறந்த மகன்களில் ஒருவரின் இடைப்பெயர் ‘சேகர்’ (Sekhar) என்று வைத்திருப்பதாகவும் கூறினார். இந்த பெயர், இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விஞ்ஞானி மற்றும் நோபல் பரிசு பெற்றவருமான சுப்ரமணியன் சந்திரசேகர் பெயரிடம் இருந்து எடுத்ததாகவும் அவர் தெரிவித்தார். இந்த தகவலை அவர் […]
elon musk

You May Like