மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வேலை.. வந்தாச்சு செம அறிவிப்பு.. 10-வது தகுதி தான்..!! உடனே விண்ணப்பிங்க..

Govt Job 2025

மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் 25,487 காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.


மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 25487 கான்ஸ்டபிள்

ஆண் விண்ணப்பதாரர்களுக்கான படை வாரியான காலியிட விவரங்கள்:

  • BSF – 524 பதவிகள்
  • CISF – 13135 பதவிகள்
  • CRPF – 5366 பதவிகள்
  • SSB – 1764 பதவிகள்
  • ITBP – 1099 பதவிகள்
  • AR – 1556 பதவிகள்
  • SSF – 23 பதவிகள்

பெண் விண்ணப்பதாரர்களுக்கான படை வாரியான காலியிட விவரங்கள்:

  • BSF – 92 பதவிகள்
  • CISF – 1460 பதவிகள்
  • CRPF – 124 பதவிகள்
  • SSB – 0
  • ITBP – 194 பதவிகள்
  • AR – 150 பதவிகள்
  • SSF – 0

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 10-ம் வகுப்பு (Matriculation) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 18-23 வயதுடையவர்களாக இருக்க வேண்டும். அதாவது 02-01-2003 முதல் 01-01-2008 வரை பிறந்திருக்க வேண்டும்.

வயது தளர்வு:

SC/ST விண்ணப்பதாரர்களுக்கு: +5 ஆண்டுகள்

OBC விண்ணப்பதாரர்களுக்கு: +3 ஆண்டுகள்

சம்பளம் எவ்வளவு? தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Pay Level-3 அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும். இதன்படி மாதச் சம்பளம் ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை கிடைக்கும். இதுதவிர மத்திய அரசின் இதர சலுகைகளும் உண்டு.

தேர்வு செய்யப்படும் முறை:

  • கணினி அடிப்படையிலான தேர்வு
  • உடல் திறன் தேர்வு (PET)/ உடல் தர தேர்வு (PST),
  • மருத்துவ தேர்வு/ ஆவண சரிபார்ப்பு

தமிழ்நாட்டில் உள்ள தேர்வு மையம்: சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர், கிருஷ்ணகிரி.

எப்படி விண்ணப்பிப்பது? அதிகாரப்பூர்வ இணையதளமான ssc.gov.in ல் சென்று விண்ணப்பிக்க வேண்டும். புதிய இணையதளத்தில் ‘One Time Registration’ (OTR) செய்வது கட்டாயம். பழைய இணையதள கணக்கு செல்லாது.

விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.12.2025

தேர்வு தேதி: பிப்ரவரி – ஏப்ரல், 2026.

Read more: அது என்ன 5-4-3-2-1 நடைபயிற்சி..? இவ்வளவு ஈசியா உடல் எடையை குறைக்க முடியுமா..?

English Summary

An employment notification has been issued to fill 25,487 constable posts in the Central Reserve Police Force.

Next Post

தூங்கி எழுந்தவுடன் இந்த 5 விஷயங்களை செய்தால், உங்களுக்கு ஒருபோதும் புற்றுநோய் வராது.. என்னென்ன தெரியுமா?

Tue Dec 2 , 2025
காலையை நாம் எப்படித் தொடங்குகிறோம் என்பது நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை தீர்மானிக்கிறது. அந்த முதல் சில மணிநேரங்கள் நமது செல்கள், வளர்சிதை மாற்றம் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தை பாதிக்கிறது, இது நோய்க்கான நமது நீண்டகால எதிர்ப்பைப் பாதிக்கிறது. வழக்கமான பயிற்சி படிப்படியாக புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கும், அதாவது தடுப்பு என்பது கடுமையான மாற்றங்களை விட காலப்போக்கில் தேர்வுகளைச் செய்வது பற்றியது. உடல் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் காலைப் பழக்கவழக்கங்கள் மிகவும் பயனுள்ளதாக […]
Cancer Cell Biology Genetics Art Concept 1

You May Like