வங்கக்கடலில் நிலவிய டிட்வா புயல் வலுவிழந்த நிலையில் சென்னை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் 2 நாட்களாக கனமழை கொட்டி தீர்த்தது.. இதனால் சென்னையின் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது.. தாழ்வான இடங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன.. சென்னை, திருவள்ளூரில் இன்றும் கனமழை தொடரும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது..
இந்த நிலையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர் “ சென்னையில் நேற்று சராசரியாக 15 செ.மீ மழை பதிவாகி உள்ளது.. சென்னையில் கனமழை விட்டு விட்டு பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.. சென்னை கடற்கரை பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவிழக்க வாய்ப்புள்ளது..
தமிழ்நாட்டில் மொத்தம் 85,000 ஹெக்டேர் பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது.. மழை நீர் வடிந்த பிறகு சேதமடைந்த பயிர்கள் குறித்து முழுமையாக கணக்கெடுக்கும் பணி நடைபெறும்.. கணக்கெடுப்பு பணி நடந்த உடன் உடனடியாக நிவாரணம் வழங்க சொல்லி முதல்வர் உத்தரவிட்டுள்ளார்..
நேற்றைய தினம் முதல்வர் ஸ்டாலின் அவர்கள், மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்காக நிவாரணம் அறிவித்திருக்கிறார்.. ஒரு ஹெக்டேருக்கு ரூ.20,000 என்று அறிவித்துள்ளதுடன் அதனை உடனடியாக வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.. தற்போது பெய்த மழையால் ஏற்பட்ட பயிர் சேதங்களையும் உடனடியாக கணக்கிட செய்ய சொல்லி முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அந்த அடிப்படையில் கணக்கிடும் பணி நடந்து வருகிறது..
டிட்வா புயல், கனமழை காரணமாக தமிழகத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.. 582 கால்நடைகள் உயிரிழந்துள்ளன.. இந்த சேத விவரங்களையும் உடனடியாக கணக்கெடுத்து உடனடியாக நிவாரணம் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.. இந்த பணிகளும் நடந்து வருகின்றன.. சென்னையில் மட்டும் 11 என்.டி.ஆர்.எஃப் குழுக்கள் தயார் நிலையில் உள்ளன..” என்று தெரிவித்தார்..
Read More : கரூர் துயரம்.. விஜய்க்கு மீண்டும் சிக்கல்? உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு!



