இன்றைய காலகட்டத்தில் பணம் சம்பாதிப்பதைவிட, அதை எப்படி பாதுகாப்பாகச் சேமிப்பது என்பதே பெரிய சவாலாக மாறியுள்ளது. சமூக வலைதளங்கள் முதல் வீடியோ தளங்கள் வரை “குறுகிய காலத்தில் பணம் இரட்டிப்பு”, “மாதம் மாதம் பெரிய லாபம்” என விளம்பரங்கள் கண்ணைக் கவர்கின்றன. ஆனால் அந்த விளம்பரங்களின் மறுபுறம் ஆபத்து, இழப்பு மற்றும் ஏமாற்றம் ஒளிந்திருப்பதே உண்மை.
இந்தச் சூழலில், “பணம் மெதுவாக வளரலாம்… ஆனால் பாதுகாப்பாக இருக்க வேண்டும்” என்ற எண்ணம் கொண்ட முதலீட்டாளர்களின் கவனம், இயல்பாகவே அரசு ஆதரவு பெற்ற சேமிப்பு திட்டங்கள் நோக்கி திரும்புகிறது. அந்த வரிசையில், பல ஆண்டுகளாக நம்பிக்கையின் அடையாளமாக திகழ்வது தபால் அலுவலக நிலையான வைப்பு (Post Office Fixed Deposit) திட்டமே.
ஒருகாலத்தில், “செலவு செய்த பிறகு மீதியைச் சேமிப்போம்” என்ற மனப்பாங்கு இருந்தது. ஆனால் இன்று அந்த நிலை மாறியுள்ளது. வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்து வரும் நிலையில், “முதலில் சேமித்து வைப்போம்… பிறகு செலவு செய்வோம்” என்ற நிதி ஒழுக்கம் அவசியமாகியுள்ளது. இந்த மாற்றம் தான், நீண்டகால சேமிப்பை நோக்கி மக்களை இட்டுச் செல்கிறது.
உங்கள் ரூ.5 லட்சம் வைப்புத்தொகையை ரூ.15 லட்சமாக மாற்ற விரும்பினால், முதலில் ரூ.5,00,000-ஐ ஒரு தபால் அலுவலக நிலையான வைப்புத்தொகையில் முதலீடு செய்ய வேண்டும். அதன் பிறகு, இந்தப் பணத்தை மீண்டும் 5 ஆண்டுகளுக்குச் செலுத்த வேண்டும். பின்னர் உங்கள் பணம் மொத்தம் 15 ஆண்டுகளுக்கு டெபாசிட் செய்யப்படும்.
15 லட்சம் பெற, நீங்கள் தபால் அலுவலக எஃப்.டி.யை இரண்டு முறை நீட்டிக்க வேண்டும். இதற்கு சில விதிகள் உள்ளன. வங்கிகளைப் போலவே, தபால் நிலையங்களிலும் நிலையான வைப்பு கணக்குகளுக்கான வட்டி விகிதமும் மாறுபடும்.
Read more: பலுசிஸ்தானில் முதன்முறையாக பெண் தற்கொலை குண்டுதாரி தாக்குதல்! 3 பாக்., ராணுவ வீரர்கள் பலி..!



