குழந்தைக்கு பசும்பால் கொடுக்கலாமா..? சிறுநீரகத்தை மோசமாக பாதிக்கும்..!! எந்த வயதில் கொடுக்கலாம்..? நிபுணர் விளக்கம்

cows milk 11zon

ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பிறந்த குழந்தை ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று விரும்புவதால், குழந்தையின் உணவில் மிகுந்த கவனம் செலுத்துகிறார்கள். பிறந்த குழந்தை 6 மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே குடிப்பது அவசியம் என்றாலும், சில சமயங்களில் உடல்நலப் பிரச்சனைகள் அல்லது வேறு காரணங்களால் தாயால் பால் கொடுக்க முடியாத நிலை ஏற்படும். இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலைகளில், குழந்தைக்குப் பசும்பால் கொடுக்கலாமா, அப்படி கொடுப்பது ஆரோக்கியமானதா என்பது குறித்துப் பிரபல குழந்தைகள் மருத்துவர் ஹரிணி ஸ்ரீ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிக முக்கியமான விளக்கங்களை பகிர்ந்துள்ளார்.


ஒரு வயது வரை பசும்பால் கூடாது ஏன்..?

மருத்துவர் ஹரிணி ஸ்ரீயின் கூற்றுப்படி, ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குப் பசும்பாலைக் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

சிக்கலான புரதங்கள்: பசும்பாலில் அதிக அளவில் சிக்கலான புரதங்கள் உள்ளன. இந்தப் புரதங்கள், கன்றுக்குட்டியின் வளர்ச்சிக்கு உதவுவதற்காக இருக்கின்றன. ஆனால், புதிதாகப் பிறந்த குழந்தைகளின் சிறுநீரகங்களை பாதிக்கச் செய்யும் தன்மை இவற்றுக்கு உண்டு. குழந்தைகளின் செரிமான மண்டலமும் இவற்றைப் சரியாக ஜீரணிக்க முடியாது.

ஊட்டச்சத்து குறைபாடு: பசும்பாலில் ஆரோக்கிய நன்மைகள் இருந்தாலும், அதில் பெரும்பாலும் இரும்புச்சத்து, வைட்டமின் சி மற்றும் குழந்தையின் வளர்ச்சிக்கு அவசியமான பிற ஊட்டச்சத்துக்கள் குறைவாக உள்ளன. எனவே, பிறந்த உடனேயே பசும்பாலைக் கொடுப்பது இரும்புச்சத்து குறைபாட்டிற்கு வழிவகுக்கும், இதனால் இரத்த சோகை ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. இது பசியின்மை மற்றும் எடை அதிகரிப்பில் பாதிப்பை ஏற்படுத்தலாம்.

சிறுநீரக சேதம்: பசும்பாலைக் கொடுப்பது குழந்தைகளின் சிறுநீரகங்களை சேதப்படுத்தலாம். மேலும், சில நேரங்களில் வயிற்றுப்போக்குடன் மலத்தில் இரத்தமும் வெளியேறலாம். தாய்ப்பால் சுரக்காத நிலையில், ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைக்குப் ஃபார்முலா பால் கொடுப்பதே சிறந்தது.

ஒரு வயதுக்குப் பிறகு தவிர்க்க வேண்டிய தவறுகள் :

ஒரு வயதுக்குப் பிறகு குழந்தைக்குப் பசும்பால் கொடுக்கும்போது, பெற்றோர்கள் செய்யக்கூடாத சில முக்கியமான தவறுகளையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

அதிக நேரம் கொதிக்க விடக்கூடாது: பசும் பாலை சூடேற்றும்போது, அதை அதிக நேரம் கொதிக்க விடக் கூடாது. பால் ஒரு முறை சூடாகி கொதிப்பதே போதுமானது. அதிக நேரம் கொதிக்கும்போது பாலில் உள்ள அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் குறைந்துவிடும்.

பாலையே உணவாக கொடுக்க வேண்டாம்: குழந்தைகள் வேறு எதுவும் சாப்பிடாதபோது, பசும் பாலை மட்டுமே அவர்களுக்கு முதன்மை உணவாகக் கொடுக்க வேண்டாம். இதனால் குழந்தைக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் போதுமான அளவு கிடைக்காமல் போகலாம், இது குழந்தையின் சீரான வளர்ச்சிக்குத் தடையாக அமையும்.

சர்க்கரை அதிகமாக கூடாது: பாலில் அதிகமாக சர்க்கரை சேர்த்துக் குழந்தைகளுக்குக் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். இது குழந்தையின் பல் ஆரோக்கியத்தையும், ஒட்டுமொத்த உடல்நலத்தையும் பாதிக்கலாம்.

Read More : SBI வங்கியில் கொட்டிக் கிடக்கும் காலியிடங்கள்..!! லட்சங்களில் சம்பளம்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

CHELLA

Next Post

இந்த பிரச்சனை இருப்பவர்கள் முட்டை சாப்பிட்டால் ஆபத்தா..? வாரத்திற்கு எத்தனை சாப்பிடலாம்..? மருத்துவர் விளக்கம்..!!

Wed Dec 3 , 2025
நமது அன்றாட உணவில் முட்டை முக்கியப் பங்கு வகித்தாலும், கொலஸ்ட்ரால் அளவு அதிகம் இருப்பவர்கள் முட்டை சாப்பிடலாமா என்ற சந்தேகம் பலருக்கும் உள்ளது. இதுகுறித்து, பிரபல நரம்பியல் மருத்துவர் சுதிர் குமார் தனது எக்ஸ் தளத்தில் முக்கியமான விளக்கங்களைப் பகிர்ந்துள்ளார். குறிப்பாக, முட்டை சாப்பிடுவதில் யாரெல்லாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பது குறித்து அவர் வழங்கிய அறிவுரைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. ஒரு நாளைக்கு ஒரு முட்டை போதுமா..? அதிக […]
Egg 1

You May Like