மெட்ராஸ் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் Intern வாய்ப்பு.. பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்..!!

MIT

அண்ணா பல்கலைக்கழகத்தின் மெட்ராஸ் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் (MIT) கீழ் செயல்பட்டு வரும் கணினி தொழில்நுட்பம் துறையில், தமிழ்நாடு புதுமை முயற்சிகள் (Tamil Nadu Innovation Initiatives) நிதி உதவியுடன் ஒரு புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.


இந்த திட்டத்தின் கீழ் திட்ட நிர்வாகி (Project Manager) மற்றும் திட்ட பயிற்சியாளர்கள் (Project Trainees) பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது. துறை சார்ந்த ஆய்வுகள் மற்றும் புதுமை முயற்சிகளில் ஈடுபட விரும்பும் பொறியியல் மாணவர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக கருதப்படுகிறது. கணினி தொழில்நுட்பம் மற்றும் தொடர்புடைய துறைகளில் படித்து வரும் அல்லது படிப்பை முடித்தவர்கள், ஆய்வு மற்றும் திட்டப் பணிகளில் ஆர்வம் கொண்டவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதற்கான விண்ணப்பங்கள் டிசம்பர் 8-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு தொடர்பான கூடுதல் விவரங்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதவியின் பெயர்:

திட்ட நிர்வாகி II (Project Associate – II) – 5

திட்ட பயிற்சியாளர் (Project Interns) – 10

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..?

* திட்ட நிர்வாகி II பதவிக்கு கணினி அறிவியல் பொறியியல் அல்லது தகவல் தொழில்நுட்பம் (CSE/IT) அல்லது சார்ந்த பிரிவுகளில் முதுகலை பொறியியல் பட்டப்படிப்பு (M.E/M.Tech) முடித்திருக்க வேண்டும்.

* திட்ட பயிற்சியாளர் பதவிக்கு கணினி அறிவியல் அல்லது தகவல் தொழில்நுட்பம் ஆகியவற்றில் இளங்கலை, முதுகலை அல்லது முனைவர் பட்டம் (B.E/B.Tech/M.E/M.Tech/PhD) பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். வாளாக மாணவர்கள் மட்டும் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சம்பளம்:

  • இளங்கலை பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு மாதம் ரூ.10,000
  • முதுகலை பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு மாதம் ரூ.15,000
  • முனைவர் பட்டம் (Ph.D.) பெற்றவர்களுக்கு மாதம் ரூ.20,000 வழங்கப்படும்.

திறன்கள்:

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் AI / ML, பெரிய மொழி மாதிரிகள் (Large Language Models – LLM) மற்றும் RAG (Retrieval Augmented Generation) ஆகிய துறைகளில் திறன்கள் பெற்றவர்களாக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், C / C++, MATLAB, Linux இயங்குதளப் பயன்பாடு மற்றும் Cloud Technologies ஆகியவற்றில் நடைமுறை அனுபவம் கொண்டவர்கள் முன்னுரிமை பெறுவார்கள்.

செயற்கை நுண்ணறிவு, தரவு செயலாக்கம், அமைப்பு மேம்பாடு மற்றும் ஆய்வு சார்ந்த திட்டங்களில் ஆர்வம் கொண்ட பொறியியல் மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு இந்த வாய்ப்பு மிகவும் ஏற்றதாக இருக்கும்.

எப்படி விண்ணப்பிப்பது? அண்ணா பல்கலைக்கழகத்தில் பணியாற்ற விரும்பும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள், பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.annauniv.edu-இல் கிடைக்கும் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, தேவையான விவரங்களை முழுமையாக நிரப்ப வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் தேவையான ஆதார ஆவணங்களை இணைத்து, கீழ்கண்ட முகவரிக்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

முகவரி:

Dr. B. Thanasekhar

Professor,

Department of Computer Technology,

Anna University,

MIT Campus,

Chennai – 600 044.

Read more: பார்வை குறைபாடு முதல் கண் வறட்சி வரை.. கொய்யா இலை தேநீர் குடித்தால் கண்களுக்கு இத்தனை நன்மைகளா..?

English Summary

Interns opportunity at Anna University.. Engineering graduates can apply..!!

Next Post

பிறந்த சில நிமிடங்களிலேயே கடுங்குளிரில் கிடந்த பச்சிளம் குழந்தை; இரவு முழுவதும் பாதுகாத்த தெரு நாய்கள்..!

Wed Dec 3 , 2025
மேற்கு வங்காளம், நாடியா மாவட்டத்தில், நவத்வீப் பகுதியில் நடந்த ஒரு சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியிலும், ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ளது. அங்கு பிறந்த சில மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தை ஒன்று ரயில்வே ஊழியர்கள் வசிக்கும் குடியிருப்பின் ஒரு கழிப்பறை அருகே, குளிரான தரையில் தனியாக விடப்பட்டிருந்தது. குழந்தையின் உடலில் இன்னும் பிறப்பின் ரத்தக்கறைகள் இருந்தன. ஆனால் அந்த குழந்தைக்கு தெருநாய்கள் “பாதுகாவலர்களாக” மாறிய சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.. குழந்தையைச் […]
baby dogs

You May Like