”இளையராஜாவுக்கு உரிமை உள்ளது..” குட் பேட் அக்லி வழக்கில் தடையை நீக்க உயர் நீதிமன்றம் மறுப்பு..!

good bad ugly ilayaraja

அஜித் குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளியான படம் குட் பேட் அக்லி.. இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.. இந்த படத்தில் இளையராஜா இசையில் வெளிவந்த ‘ஒத்த ரூவா தாரேன்..’ ‘இளமை இதோ இதோ..’ என் ஜோடி மஞ்சக்குருவி ஆகிய பாடல்களை படக்குழுவினர் பயன்படுத்தி இருந்தனர்..


அஜித் நடித்த குட் பேட் அக்லி படத்தில் தனது பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து இசையமைப்பாளர் இளையராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.. இந்த படத்தில் இளமை இதோ இதோ, என் ஜோடி மஞ்ச குருவி, ஒத்த ரூபாயு தாரேன் ஆகிய பாடல்களை அனுமதி இல்லாமல் பயன்படுத்தி உள்ளனர்.. இது காப்புரிமை சட்டத்திற்கு எதிரானது.. எனவே இந்த பாடல்களை படத்தில் இருந்து நீக்க வேண்டும்.. என்று கூறியிருந்தார்..

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளமை இதோ இதோ, ஒத்த ரூபாயும் தாரேன், என் ஜோடி மஞ்சக் குருவி ஆகிய பாடல்களை பயன்படுத்த இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த நிலையில் குட் பேட் அக்லி படத்தில் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் மனு தாக்கல் செய்திருந்தது.. இந்த மனுவை நீதிபதி என். செந்தில்குமார் விசாரித்தார்.. இளையராஜா தரப்பு “ திரைப்பட தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து பாடல்களை வாங்கியதாக கூறுகிறார்கள்.. பதிப்புரிமை சட்டப்படி இசையமைப்பாளரிடம் தான் பாடல் உரிமை உள்ளது.. ஒட்டுமொத்த படத்திற்கு தயாரிப்பாளருக்கு உரிமை இருந்தாலும், பாடல்களை தனியாக எடுத்து மூன்றாம் தரப்பிடம் விற்க தயாரிப்பாளருக்கு உரிமை இல்லை.. இந்த படத்தில் 3 பாடல்கள் உருமாற்றம் செய்யப்பட்டுள்ளன.. அதற்கு தயாரிப்பாளருக்கு உரிமை இல்லை..” என்று வாதிட்டது..

தயாரிப்பு நிறுவன தரப்பு “ பட தயாரிப்பாளரிடம் முழு உரிமை உள்ளது.. இசையமைப்பாளரிடம் முழு உரிமை இருந்தால் அதை அவர் நிரூபிக்க வேண்டும்.. “ என்று வாதிடப்பட்டது.. அனைத்து வதங்களையும் கேட்ட நீதிபதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.. இந்த நிலையில் இந்த வழக்கில் இன்று நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.. அப்போது பாடல்களை உருமாற்றம் செய்வதை தடுக்கவும், அனுமதியின்றி பயன்படுத்துவதை தடுக்கவும் இளையராஜாவுக்கு உரிமை உள்ளது.. இந்த வழக்கில் ஏற்கனவே பிறப்பித்த இடைக்கால உத்தரவில் தலையிட எந்த காரணமும் இல்லை என்று கூறிய நீதிபதி மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.. மேலும் பிரதான வழக்கின் விசாரணை 2026-ம் ஆண்டு ஜனவரி 6-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்..

Read More : வாடகை வீட்டில் குடி இருக்கீங்களா..? இல்ல ஹவுஸ் ஓனரா..? மொத்தமாக மாறும் விதிகள்..!! நோட் பண்ணுங்க மக்களே..

RUPA

Next Post

Walking: தினமும் 2,337 அடிகள் நடந்தாலே இதய நோய் அபாயம் குறையும்.. ஆய்வில் வெளிவந்த தகவல்..!!

Wed Dec 3 , 2025
Walking just 2,337 steps a day can reduce the risk of heart disease, study finds..!!
walking

You May Like