கார்த்திகை தீபம் 2 சீரியலில் ராஜா சேதுபதியின் உண்மையான பேரன் நான் தான் என்ற உண்மையை கார்த்திக் சாமுண்டீஸ்வரியிடம் கூறிவிட்டார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சாமுண்டீஸ்வரி ஆத்திரத்தில் தலையில் தண்ணீரை ஊற்றி இனிமேல் இந்த ஊருக்கும், இந்த குடும்பத்திற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறினார்.
கும்பாபிஷேகம் முடிந்தால் தான் வருவேன் என கூறிய கணவனிடம், தாலியை வைத்து பிளாக்மெயில் செய்து அங்கிருந்து கூட்டிக் கொண்டு சென்றார். ரேவதி வர முடியாது என்று சொல்லியும் அவரை கட்டாயப்படுத்தி கூட்டிச் சென்றார். இந்த நிலையில் இன்றைய எபிசோட்டிற்கான புது புரோமோ வெளியாகியுள்ளது.
அந்த புரோமோவில், இந்த ஊர் உலகத்தில் எங்கு தேடினாலும் இப்படியொரு புருஷன் எனக்கு கிடைக்கமாட்டார். என்னை கண்ணைப் போன்று பாதுகாத்துக் கொள்ளும் பிரியமான மனுஷன். எப்பவோ நடந்த ஒரு விஷயத்திற்காக நீ என்னுடைய வாழ்க்கையை அழிக்க முடியாது. என்னுடைய வாழ்க்கை இவருடன் தான். நான் இவருடன் தான் போவேன் என சாமுண்டீஸ்வரியிடம் ஆவேசமாக பேசுகிறாள்.
அதுமட்டுமல்லாமல் அவர் இந்த குடும்பத்திற்காக செய்த எல்லாவற்றையும் நீ துச்சமாக கூட நினைக்கலாம். ஏன்னா உன்னுடைய ஈகோ அப்படி. ஆனால், என்னால் அப்படி நினைக்க முடியாது. ஏனா என்னுடைய உயிரே இவர் தான். இவர் இருக்கும் இடம் எப்படி இருந்தாலும், அது எனக்கு சொர்க்கம் என ரேவதி கூறுகிறாள். கார்த்திக் தன்னுடன் ரேவதியை கூட்டிச் செல்வானா..? சாமுண்டீஸ்வரி எடுக்கப்போகும் முடிவு என்ன என்பதை இனி வரும் எபிசோட்களில் பார்க்கலாம்.
Read more: Walking: தினமும் 2,337 அடிகள் நடந்தாலே இதய நோய் அபாயம் குறையும்.. ஆய்வில் வெளிவந்த தகவல்..!!



