சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய் எபிசோட்டில் கிரிஷை அவனுடைய பாட்டி முத்து வீட்டில் விட்டுட்டு போனாதால் விஜயா கோபத்தில் இருக்கிறார். அதன் பிறகு பார்வது வீட்டிற்கு வந்த விஜயா கிரிஷை வீட்டை விட்டு வெளியே அனுப்பனும் என்று சொல்கிறாள். அப்போது ரோகிணியும் உடன் இருக்கிறாள். அந்த சமயம் அங்கு வந்த சிந்தாமணியிடம் விஜயா ஐடியா கேட்கிறாள்.
அதற்கு சிந்தாமணி அந்த பையனுக்கு சூடு வச்சுருங்க.. அந்த பையனுக்கு உங்களை பார்த்து பயம் வரணும்னு சொன்னதும் ரோகிணி கோபமாகி கத்துகிறார். அப்படியெல்லாம் செஞ்சா போலீஸ் கேஸ் ஆகிவிடும் என்று சொல்ல, அதற்கு விஜயா ஆமா எனக்கும் பயமாயிருக்கு. இந்த ஐடியா வேண்டாம் இன்னொரு ஐடியா கொடுங்க என்கிறாள். அதன்பிறகு என் அடிஆள்கிட்ட சொல்லி அந்த பையனை கடத்தி ஒரு ஹாஸ்டல்ல கொண்டு விடுற சொல்லுறேன் என்று சொல்ல அதற்கு விஜயா சம்மதிக்கிறார்.
இதனிடையே பார்வதி கடுப்பாகி என்னாலலாம் இதற்கு ஒத்துக்க முடியாதுனு கோபப்பட்டு கிளம்பி போய் விடுகிறார். இதை தாங்கிக்க முடியாத ரோகிணி வெளியே வந்ததும் மீனாவுக்கு போன் பண்ணி நடந்த விஷயத்தை சொல்கிறார். உடனே மீனா முத்துவுக்கு போன் போட்டு நான் வெளியே இருக்கிறேன் நீங்க கிரிஷை பத்திரமா வீட்டுக்கு கூட்டிட்டு வந்துருங்க என சொல்லுகிறார். முத்துவும் ஸ்கூலுக்கு போகிறார்.
அதற்குள் சிந்தாமணி கிரிஷை பார்த்து நாங்க மீனா ஆன்ட்டிக்கு தெரிஞ்சவங்க தான், உன்னை கூட்டிட்டு வர சொன்னாங்க எனக் கூறி காரில் ஏற்றுகிறாள். அடியாள்களுடன் கிரிஷ் போகும் போது, நீங்க யாரு? எங்க கூட்டிட்டு போறீங்கன்னு கத்திக்கிட்டே இருக்கிறான். அப்போது முத்துவின் காரில் கிரிஷை கடத்திட்டு போகும் அடியாட்கள் மோதி விடுகிறார்கள். இதனால் முத்து அவர்களிடம் வாக்குவாதம் செய்யும்போது கிரிஷ் உள்ளே இருந்து முத்து அங்கிள் என்று கத்த முத்து அவர்களை துரத்தி அடித்து விசாரிக்கிறார்.
அப்போதுதான் சிந்தாமணி தான் கிரிஷை கடத்த சொன்னது என்ற உண்மை தெரிய வருகிறது. பிறகு கிரிஷை கூட்டிக்கொண்டு வீட்டிற்கு முத்து வரும்போது அண்ணாமலை என்னாச்சு என்று கேட்க, நடந்த விஷயத்தை சொல்கிறார். உடனே அண்ணாமலை போலீசுக்கு போன் பண்ணு.. இவ திருந்த மாட்டாள் என கோபமாக கத்துகிறான். இதனால் விஜயா அதிர்ச்சியில் இருக்கிறார். அடுத்து என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.



