மதுரை, திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள உச்சிப்பிள்ளையார் கோவில் மண்டபம் அருகில் உள்ள மண்டபத்தின் மேல் சுப்பிரமணிய சுவாமி சார்பில் ஆண்டுதோறும் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படுகிறது.. மலை உச்சியில் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது காலங்காலமாக பின்பற்றப்பட்டு வரும் வழக்கமாகும்.. ஆனால் 2-ம் உலகப் போரின் போது பாதுகாப்பு காரணமாக ஆங்கிலேய அரசு அதனை தடை செய்தது.. அதனால் கோவில் முன்புறம் உள்ள தூணில் தீபம் ஏற்றப்பட்டது.. இதை மாற்றக் கோரியும், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதிக்க கோரியும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது..
இந்த வழக்கை விசாரித்த ஜி.ஆர். சுவாமிநாதன் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்தார்.. விசாரணை முடிவில் கடந்த 1-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.. மலை உச்சியில் இருக்கும் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றலாம் என்று தீர்ப்பளித்துள்ளார்.. மேலும் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கான முழு பாதுகாப்பையும் காவல்துறை வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்..
இதற்கு எதிராக கோயில் நிர்வாகம் சார்பில் செவ்வாய்க் கிழமை மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.. ஆனால் இந்த மனு நேற்று விசாரணைக்கு வரவில்லை.. இதனால் தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுப்படி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் நேற்று மாலை மகா தீபம் ஏற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்டது..
அதன்படி தீபத்தூணில் மகா தீபம் ஏற்றுவதற்கான முன்னேற்பாடுகள் நேற்று பிற்பகல் நடந்தது.. தீபம் ஏற்றுவதற்கு தேவையான மண் பானை, நெய், திரி, சூடம் ஆகியவை மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டன..
இதனிடையே இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் தலைமையில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் திருப்பரங்குன்றம் கோயில் பதினாறுகால் மண்டபம் பகுதியில் கூடி கந்தசஷ்டி கவசம் பாராயணத்தில் ஈடுபட்டனர்.. மாலை 4 மணியளவில் மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்ட தீபம் ஏற்றும் பொருட்கள் அனைத்தும் கீழே இறக்கப்பட்டன.. மாலை 6.05 மணியளவில் மலை மீதுள்ள உச்சிப் பிள்ளையார் கோயில் மண்டபத்தில் மட்டும் கோயில் நிர்வாகம் சார்பில் மகா தீபம் ஏற்றப்பட்டது..
இதையடுத்து இந்து அமைப்பினர் மலைப்பாதை அருகே திரண்டு போலீசார் அமைத்திருந்த தடுப்புகளை கீழே தள்ளிவிட்டு மலை மீது ஏற முயன்றனர்.. இதனால் இந்து அமைப்பினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.. இதில் காவலர்கள் உட்பட இந்து அமைப்பினர் காயமடைந்தனர்.. இந்து அமைப்பினர் மலைப்பாதை அருகே 2 மணி நேரத்திற்கும் மேல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே பொதுமக்களின் பொது அமைதியை கருத்தில் கொண்டு திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் தனி நீதிபதி ஜி.ஆர். சுவானிநாதன் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வந்தது..
அப்போது தனி நீதிபதியின் உத்தரவு நீதித்துறையை மீறிய நடவடிக்கை, இந்த உத்தரவு மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்று தமிழக அரசு வாதிட்டது.. இது மத ரீதியான கலவரத்திற்கு வழிவகுக்கும், பதற்றத்தை உருவாக்க மனுதாரர் முயற்சி செய்ததால் தான் நேற்று 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்றும் வாதிட்டது..
தொடர்ந்து சிக்கந்தர் தர்கா தரப்பு, கடந்த 100 ஆண்டுகளில் தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை, எனவே புதிதாக ஒரு நடைமுறையை கொண்டு வரக்கூடாது என்று வாதிட்டது..
மேலும் மனுதாரர் தரப்பு, ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன்பு தீபத்தூணில் தான் தீபம் ஏற்றப்பட்டது.. அறநிலையத்துறை சார்பில் தீபம் ஏற்ற வேண்டும் அல்லது எங்களை தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும் என்றே கோரிக்கை வைத்தோம்.. ஆனால் தெளிவான உத்தரவு பிறப்பித்தும் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படாததால் CISF வீரர்கள் தீபம் ஏற்றும் சூழல் ஏற்பட்டது. என்று வாதிட்டது..
அப்போது , திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற போலீஸ் பாதுகாப்பு கேட்ட நிலையில் CISFவீரர்கள் எங்கிருந்து வந்தனர் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.. போலீஸ் பாதுகாப்பு வழங்க, அரசு மறுத்ததாக எதை வைத்து கூறுகிறீர்கள் எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்..
மேலும் தங்களது சடங்கை செய்யக்கூடாது என ஒரு தரப்பை சொல்வதால் மத நல்லிணக்கம் உருவாகாது.. அனைத்து தரப்பும் தங்களின் சடங்கை செய்தால் தான் மத நல்லிணக்கம் ஏற்படும்.. என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.. மேலும் தற்போதைய நடைமுறை 100 ஆண்டுகளுக்கு பிறகு இருக்குமா என்று கூற முடியாது எனவும் நீதிபதிகள் கூறினர்..
அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கி உள்ளனர்.. அதன்படி தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட தமிழக அரசின் மேல் முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.. மத்திய தொழில் பாதுகாப்பு படையை அழைத்ததில் தவறு இருப்பதாக தெரியவில்லை என்று தெரிவித்து நீதிபதிகள் தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்தனர்..
Read More : Flash : கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. போலீசார் குவிப்பு.. தீவிர சோதனை..!



