உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர் நகரில், பெற்றோர் இல்லாமல் தவித்து வந்த 14 வயது சிறுமியை, சொந்த மாமாவே பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முசாபர் நகரைச் சேர்ந்த 14 வயதுச் சிறுமியின் தாயார் சில வருடங்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், சிறுமியின் தந்தையும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். ஆதரவின்றித் தவித்து வந்த சிறுமி, வேறு வழியின்றித் தன்னுடைய உறவினரான 35 வயது மாமாவின் வீட்டில் தங்கி வசித்து வந்துள்ளார்.
நம்பிக்கையோடு அடைக்கலம் கொடுத்த குடும்ப உறவினரே, சிறுமியின் பலவீனத்தை பயன்படுத்தி இந்தக் கொடூரச் செயலைச் செய்துள்ளார். வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் அந்த நபர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இந்த கொடூரச் செயல் குறித்துப் பாதிக்கப்பட்ட சிறுமி அருகில் வசித்தவர்களிடம் தெரிவித்த நிலையில், அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக சிறுமியை அழைத்துக் கொண்டு சென்று போலீஸில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், பாலியல் வன்கொடுமை செய்த அந்த நபரை விரைந்து கைது செய்தனர். தாய், தந்தையின் அரவணைப்பு இல்லாமல் தவித்து வந்த சிறுமியை, சொந்த மாமாவே சீரழித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



