நாடு முழுவதும் புதிய சுங்கக்கட்டணம் முறை நாடு முழுவதும் அமலாகிறது என்ற சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.. மக்களவையில் கேள்வி நேரத்தில் பேசிய அவர் “ புதிய சுங்கக்கட்டண முறை தற்போது 10 இடங்களில் சோதனை முயற்சியாக தொடங்கப்பட்டுள்ளது.. இது ஒரு ஆண்டுக்குள் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும். இந்த புதிய முறையால், வாகனங்களை நிறுத்தி சுங்கக் கட்டணம் வசூலிக்கும் பழைய முறை முடிவுக்கு வரும். முன்புபோல் சுங்கச்சாவடியில் யாரும் உங்களை நிறுத்தமாட்டார்கள். இனி முழுக்க முழுக்க மின்சார (electronic) சுங்கக் கட்டணம் முறை மட்டுமே இருக்கும்,” என அவர் கூறினார்.
நெடுஞ்சாலை திட்டங்கள்
தற்போது நாடு முழுவதும் ரூ.10 லட்சம் கோடி மதிப்பிலான 4,500 நெடுஞ்சாலைப் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றும் அமைச்சர் தெரிவித்தார். சமீபத்தில் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி, இந்திய தேசிய கட்டணக் கழகம் (National Payments Corporation of India NPCI) நாடு முழுவதும் வசூலை எளிமையாக்க தேசிய மின்னணு சுங்கக்கட்டணம் (National Electronic Toll Collection -NETC) என்ற ஒருங்கிணைந்த முறைமையை உருவாக்கியுள்ளது.
NETC என்றால் என்ன?
NETC என்பது ஒருங்கிணைந்த, இடமாற்றக்கூடிய (interoperable) மின்னணு சுங்கக்கட்டண வசூல் தளம். இந்த தளம் இந்தியாவின் அனைத்து நெடுஞ்சாலைகளிலும் சுங்கக்கட்டண வசூலை தானியங்கியாகச் செய்ய உதவுகிறது.
NETC-இன் முக்கிய பகுதி – FASTag
FASTag என்பது ரேடியோ அதிர்வெண் அடையாளம் காணல் (Radio Frequency Identification -RFID) தொழில்நுட்பத்தில் இயங்கும் ஒரு ஸ்டிக்கர். இந்த வாகனத்தின் முன் கண்ணாடியில் ஒட்டப்படும். வாகனம் சுங்கச்சாவடியை கடக்கும்போது, தானாகவே பயணியின் வங்கிக் கணக்கில் இருந்து சுங்கக்கட்டணத்திற்கான தொகை கழிக்கப்படும். இதனால் சுங்கச்சாவடியில் வாகனம் நிற்க வேண்டிய அவசியம் இல்லை; இதனால் நெரிசல் குறையும்.
அரசின் புதிய திட்டம்
இது தொடர்பான கேள்விக்கு எழுத்து வடிவில் பதில் அளித்த நிதின் கட்கரி “பயணிகள் சந்திக்கும் நெரிசல், தாமதம், நீண்ட வரிசைகள் ஆகியவற்றை குறைப்பதற்காக, புதிய மற்றும் மேம்பட்ட சுங்கக்கட்டண் வசூல் முறைகள் அறிமுகப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இது தேசிய நெடுஞ்சாலைகளில் பயண அனுபவத்தை மேலும் மேம்படுத்தும்.
தடையற்ற புதிய Toll வசூல் முறை
“மோட்டார் வாகனங்கள் எவ்விதத் தடையும் இன்றி சாலைகளில் சீரான இயக்கத்துடன் செல்வதற்காக, அரசு புதிய பலவழிப் பாதை மின்னணு சுங்க வசூல் (Multi-Lane Free Flow Electronic Toll Collection – MLFF) முறையை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது,” என நிதின் கட்கரி தெரிவித்தார்.
இந்த MLFF முறை என்ன செய்யும்?
இது தடையில்லா (barrier-less) சுங்கக்கட்டண முறை. இதில் பல தொழில்நுட்பங்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.. அதாவது, வாகன எண் தானாகவே கேமராவில் படிக்கப்படும். செயற்கை நுண்ணறிவு மூலம் விவரங்கள் சரியாக கண்காணிக்கப்படும், FASTag முறையில் தானியங்கு பணம் கழிக்கப்படும், இதனால், சுங்கச்சாவடியில் வாகனம் நிற்க வேண்டிய அவசியமே இருக்காது.
தேர்ந்தெடுக்கப்பட்ட சுங்கச்சாவடிகளில் இந்த புதிய “FASTag + ANPR/AI Barrier-Free” முறையை நடைமுறைப்படுத்துவதற்கான முன்மொழிவு ஏற்கனவே அழைக்கப்பட்டு அல்லது இறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் முதலில் சில இடங்களில் முதல்கட்டமாக சோதனை அடிப்படையில் நடைபெறும். அதில் நல்ல முடிவுகள் வந்தால் பின்னர் படிப்படியாக இந்த திட்டம் செயல்படுத்தப்படும்..
Read More : நடுவானில் வெடிகுண்டு மிரட்டல்.. திருப்பி விடப்படப்பட்ட விமானம்.. இண்டிகோவுக்கு அடுத்த சிக்கல்..



