மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 9-வது நினைவு தினத்தை ஒட்டி மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ் அஞ்சலி செலுத்தினார்.. இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் தான் தனிக்கட்சி தொடங்கப் போவதாக வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவித்தார்..
இதுகுறித்து பேசிய அவர் “ தனிக்கட்சி தொடங்கப் போவதாக நான் எப்போது கூறினேன்? தனிக்கட்சியை தொடங்க இருப்பதாக நான் எங்கேயும் எந்த சூழலிலும் சொல்லவில்லை.. மரியாதை நிமித்தமாகவே அமித்ஷாவை டெல்லியில் சந்தித்தேன். அமித்ஷாவிடம் தமிழகத்தின் இன்றைய அரசியல் சூழல்கள் குறித்து எடுத்துரைத்தேன்.. அதை கவனமாக கேட்ட அவர் தனது கருத்துகளை தெரிவித்தார்..
யாராலும் வெல்ல முடியாத இயக்கமாக இந்த இயக்கத்தை அம்மா மாற்றினார்.. அதிமுகவை மீண்டும் வலிமையாக்க வேண்டும் தமிழக மக்களின் விருப்பம்.. தவெகவில் இணைந்த பின்னர் செங்கோட்டையனுடன் நான் பேசவில்லை. அவரும் என்னுடன் பேசவில்லை.. எங்களின் அடுத்தக்கட்ட நகர்வு தமிழக மக்களின் எண்ணப்படி தான் நடக்கும்.. இது ஜனநாயக நாடு என்பதால் யார் வேண்டுமானாலும் எந்த கட்சியில் வேண்டுமானாலும் சேரலாம்..” என்று தெரிவித்தார்..
முன்னதாக டிசம்பர் 15-ம் தேதி தனிக்கட்சி குறித்த அறிவிப்பை ஓபிஎஸ் வெளியிட உள்ளதாக தகவல் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.



