”அன்பே சிவம், அறிவே பலம்.. புதிய செயல்திட்டங்களுக்கு நாம் பலியாகி விடக்கூடாது..” திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து கமல்ஹாசன் எம்.பி. கருத்து..!

kamalhaasan n

திருப்பரங்குன்றம் தீப வழக்கு விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது.. திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான வழக்கில், மதுரை உயர்நீதிமன்ற கிளை தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டார். ஆனால் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டபத்திலேயே தீபம் ஏற்றபட்டது..


இதையடுத்து மனுதாரர் ராம ரவிக்குமார் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்தார்.. அதை விசாரித்த ஜி.ஆர். சுவாமிநாதன் மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்களின் துணையோடு மனுதாரர் 10 பேரை அழைத்துக் கொண்டு மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என்று உத்தரவிட்டார்..

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளைவில் இரு நீதிபதிகள் அமர்வு முன்பு மேல்முறையீடு செய்தது.. ஆனால் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது..

நேற்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் நேற்றே தினமே தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று உத்தரவிட்டார்.. 10 பேர் மட்டுமே செல்ல வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்த நிலையில், சுமார் 500க்கும் மேற்பட்ட பாஜகவினர் மற்றும் இந்து அமைப்பினர் மலை மீது ஏற முயன்ற போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால், காவல்துறையினர் வைத்திருந்த தடுப்புகளை தகர்த்து கோயிலை நொக்கி பாஜகவினர் செல்ல முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.. மலையேற அனுமதி கோரிய தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பாஜகவினர் மற்றும் இந்து முன்னணி அமைப்பினரை காவல்துறையினர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்..

இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் மாநிலங்களவை எம்.பியுமான கமல்ஹாசன் திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ மதங்களின் அடிப்படை மனிதம் போற்றுவது. பொது அமைதிக்கும் மத நல்லிணக்கத்துக்கும் ஊறு விளைவிக்கும் எந்தப் புதிய செயல்திட்டங்களுக்கும் நாம் பலியாகி விடக்கூடாது. அன்பே சிவம், அறிவே பலம்.” என்று குறிப்பிட்டுள்ளார்..

Read More : திருப்பரங்குன்றம் விவகாரம்.. நாடாளுமன்றத்தில் திமுக எம்.பிக்கள் அமளி.. மக்களவை ஒத்திவைப்பு..

RUPA

Next Post

“நீதிபதி ஜி.ஆர். சாமிநாதன் RSS-காரர்..” நாடாளுமன்றத்தில் ஒரே போடாய் போட்ட டி.ஆர். பாலு..! கொந்தளித்த பாஜக !

Fri Dec 5 , 2025
திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க திமுக எம்.பிக்கள் தொடர் முழக்கமிட்டு அமளியில் ஈடுபட்டனர்.. திருப்பரங்குன்றத்தில் மத மோதல்களை உருவாக்க முயல்வதாக திமுக குற்றம்சாட்டி உள்ளது.. கேள்வி நேரத்தை ஒத்தி வைத்து விட்டு இதுகுறித்து விவாதிக்க வேண்டும் என்று திமுக எம்.பிக்கள் கோரிக்கை விடுத்தனர்.. கேள்வி நேரம் முடிந்த பின்னர் பேசலாம் என்று சபாநாயகர் கூறிய நிலையில், அதனை ஏற்காத திமுக எம்.பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர்.. நீதி வேண்டும், […]
gr saminathan tr balu 1

You May Like