வங்கக்கடலில் கடந்த வாரம் உருவான டிட்வா புயல் காரணமாக சென்னைக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டது.. அன்றைய தினம் கனமழை பெய்யவில்லை.. மாறாக புயல் வலுவிழந்த நிலையில் இந்த வாரம் திங்கள்கிழமை, சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது.. அன்றைய பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படாததால் மாணவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.. ஏன் விடுமுறை அளிக்கவில்லை என்று பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் விமர்சித்தனர்..
தொடர்ந்து சென்னையில் கனமழை கொட்டி தீர்த்ததால் செவ்வாய், புதன், வியாழன் என 3 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.. இதில் நேற்று சென்னை, திருவள்ளூரில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டது.. நேற்று முதல் சென்னையில் படிப்படியாக மழை குறைந்த நிலையில் இன்று வழக்கம் போல் பள்ளி, கல்லூரிகள் இயங்கின..
இந்த நிலையி சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு நாளை வேலைநாள் அறிவிப்பு வெளியாகி உள்ளது.. மழை காரணமாக விடப்பட்ட விடுமுறையை ஈடு செய்யும் விதமாக சென்னையில் நாளை பள்ளிகள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..



