தவெகவில் இணைந்த நாஞ்சில் சம்பத் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. அப்போது “ 6 ஆண்டுகளாக நான் எந்த அரசியல் கட்சியிலும் இல்லை.. திராவிட அறிவாலயத்தில் இருந்து என்னை வசைபாடினார்கள்.. அறிவுத்திருவிழாவில் என்னை திட்டமிட்டு நிராகரித்தனர்.. என்னை வசைபாடியதால் மனதளவில் நான் உடைந்து போனேன்.. தந்தி டிவி மக்கள் மன்றத்தில் விஜய் சரியான திசையில் பயணிக்கிறார் என்று உரையாற்றினேன்.. அந்த நாளில் இருந்து எனக்கு நெருக்கடியும், வசையும், மிரட்டலும் அதிகமாக வந்தது..
எனக்கு யார் மீது கோபம் இல்லை, வருத்தம் இல்லை.. நான் எதுவும் அவர்களிடம் கேட்டதில்லை.. கேட்டாலும் சைக்கிள் கூட கிடைக்காது.. இன்று எனது திசையை தமிழக வெற்றிக் கழக தலைவர் தம்பி தீர்மானித்துள்ளார்.. நான் தவெகவில் என்னை இணைத்து கொண்டுள்ளேன்.. ஒரு உற்சாகமான மனநிலையில் இருக்கிறேன்.. கடந்த காலத்தில் ஏற்பட்ட கசப்புகள், காயங்களில் இருந்து விடுபட்டவனாக உணர்கிறேன்.. இன்று தம்பி விஜய்யை சந்தித்த பொன் வேளையில் இருந்து புதிதாக பிறந்ததை போல் எண்ணி பூரிக்கிறேன்..என்னை பார்த்ததும் உங்கள் ஃபேன் என்று விஜய் கூறினார். விஜய் அப்படி சொன்னதும் நான் மெய் சிலிர்த்துப் போனேன்..
பெரியார், காமராஜரை கொள்கை தலைவர்களாக விஜய் முன்னிறுத்துகிறார்.. தமிழ்நாட்டில் இனி பேசுவதற்கு நிறைய உள்ளன.. இனி தமிழக அரசியல் பரபரப்பாகவே இருக்கும்.. என்னை முடக்கி வைத்திருந்தனர்.. இயக்குவதற்கான வாய்ப்பை விஜய் தந்துள்ளார்.. தமிழக வரலாற்றில் லட்சக்கணக்கான இளைஞர்களை மூலதனமாக வைத்துள்ள கட்சி தவெக.. இளைஞர்கள் மூலம் அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தும் திட்டம் விஜய்யிடம் உள்ளது.. ” என்று தெரிவித்தார்..
Read More : வெட்கக்கேடு.. மதுரையை இன்னொரு அயோத்தியாக்கும் சதிச்செயல்களுக்கு நீதித்துறையே துணைபோவதா? கொந்தளித்த சீமான்!



