fbpx

அதிரடி உத்தரவு…! மருந்து கடைகளில் 30 நாட்களுக்குள் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்…!

குழந்தைகள் மத்தியில் போதைப் பொருட்கள் பயன்படுத்துதலையும், கடத்துதலையும் தடுக்கும் பொருட்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும்.

இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகமும் இணைந்து குழந்தைகள் மத்தியில் போதைப் பொருட்கள் பயன்படுத்துதலையும், சட்டவிரோத போதைப் பொருட்கள் கடத்தலையும், தடுக்கும் விதமாக “கூட்டு செயல் திட்டம்” வெளியிட்டுள்ளனர்.

அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் ‘H’, ‘H1’, மற்றும் ‘X’ அட்டவணை மருந்துகளை விற்பனை செய்யும் அனைத்து மருந்தகங்களின் உள்ளேயும், வெளியேயும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1973, பிரிவு 133-ன் கீழ் மாவட்ட ஆட்சியர் அவர்களால் உத்தரவிடப்பட்டுள்ளது.

உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். அவ்வாறு தவறும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட அலுவலர்கள். மருந்தகங்களின் உரிமையாளர்கள் மீது மேற்கண்ட உத்தரவினை பின்பற்றாததற்காக சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளவும், மருந்தகங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் காட்சிப்பதிவு செயல்பாடுகளை, மாவட்ட போதைப் பொருட்கள் தடுப்பு அதிகாரிகள் / குழந்தை நல காவல் அதிகாரிகள் அவ்வபோது சரிபார்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து... 5 பேர் ஸ்பாட் அவுட்... 19 பேர் மருத்துவமனையில் அனுமதி...!

Sat Dec 30 , 2023
திருச்சி – ராமேஸ்வரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள கடையில் அமர்ந்திருந்த பக்தர்கள் மீது மோதியதில் லாரி மோதியதில் ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். புதுக்கோட்டை மாவட்டம் நமணசமுத்திரம் அருகே உள்ள திருச்சி – ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் லாரி ஒன்று சிமெண்டை ஏற்றுக்கொண்டு சென்றுள்ளது. நமணசமுத்திரம் அருகே லாரி கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்கு உள்ளாகியது. இதில் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள கடையில் அமர்ந்திருந்த பக்தர்கள் […]

You May Like