செயின்ட் ஆன்-(Sainte-Anne) என்ற இடத்தில், குவாதலூப் (Guadeloupe) எனப்படும் பிரெஞ்சு பிராந்தியத்தில், நேற்று (உள்நாட்டு நேரம்) கிறிஸ்துமஸ் விழா தயாரிப்புகள் நடைபெற்று கொண்டிருந்தபோது, ஒருவர் வாகனத்தை கூட்டத்திற்குள் ஓட்டினார். இந்த சம்பவத்தில் மொத்தம் 19 பேர் காயமடைந்தனர்; அவர்களில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.. அவர்களில் 3 பேர் மிகக் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த துயரமான நிகழ்வு நகர மன்றம் மற்றும் தேவாலயத்தின் எதிரே உள்ள ஷோல்ச்சர் சதுக்கம்e பகுதியில் நடைபெற்றது.
விபத்துக்கான காரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை; விபத்து எப்படி நடந்தது என்பதை அதிகாரிகள் விசாரணை செய்கிறார்கள். சம்பவ இடத்தில் இருந்த சில சாட்சிகள், ஓட்டுநர் வாகனத்தை கூட்டத்திற்குள் ஓட்டிய போது உடல்நலக் கோளாறு ஏற்பட்டிருக்கலாம் என்று கூறியுள்ளனர். ஆனால் இந்த கருத்து அதிகாரப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே இருந்ததாகவும் கூறப்படுகிறது..
தீயணைப்பு வீரர்கள், மருத்துவர்கள், காவல்துறையினர் ஆகியோர் சம்பவ இடத்தில் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். நகரின் மேயரும் அங்கு சென்று, இந்த துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அவசர மேலாண்மை குழுவை செயல்படுத்தியுள்ளார்.
ஜெர்மனியில் கிறிஸ்துமஸ் சந்தையில் நடந்த கார் தாக்குதல்
கடந்த ஆண்டு, ஜெர்மனியின் கிழக்கு பகுதியிலுள்ள மக்டெபர்க் (Magdeburg) நகரத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக அமைக்கப்பட்டிருந்த கூட்டம் நிறைந்த வெளிப்புற சந்தையில், ஒரு கார் வேகமாக நுழைந்து மோதி விபத்து ஏற்படுத்தியது. இந்த துயரச் சம்பவத்தில் குறைந்தது 2 பேர் உயிரிழந்தனர், 68 பேர் காயமடைந்தனர்.
அந்த காரை ஓட்டிய நபர் 50 வயதான சவுதி நாட்டு மருத்துவர் ஆவார். அவர் 2006 முதல் ஜெர்மனியில் வசித்து வருகிறார். சம்பவத்திற்குப் பிறகு அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது..
Read More : Cloudflare மீண்டும் முடக்கம்: உலகளாவிய செயலிழப்பால் பல முன்னணி வலைதளங்கள் பாதிப்பு..! முழு லிஸ்ட் இதோ..!



