fbpx

ரெட் அலர்ட்!… அடர்ந்த பனிமூட்டம்!… Fog Lamps விளக்குகளைப் பயன்படுத்தவும்… இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தல்!

கடந்த சில நாட்களாக நடுங்கவைக்கும் கடும் பனிமூட்டம் காரணமாக டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.

டெல்லி-NCRன் (National Capital Region) பல பகுதிகளில் மிதமான மூடுபனியுடன் கூடிய குளிர் காலநிலை நிலவி வருகின்றது. அங்கு குறைந்தபட்ச வெப்பநிலை 10.7 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது. இதன் காரணமாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) வட இந்தியாவில் அடர்ந்த பனிமூட்டம் காரணமாக ரெட் அலெர்ட் எச்சரிக்கையை விடுத்துள்ளது.

“பஞ்சாப், ஹரியானா, டெல்லி உத்திரப் பிரதேசம், வடக்கு ராஜஸ்தான் மற்றும் வடக்கு மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட இடங்களுக்கு அடர்த்தியான மூடுபனி நிலவிவருவதால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் மக்கள் வாகனம் ஓட்டும் போதும் அல்லது எந்தப் போக்குவரத்திலும் வெளியில் செல்லும்போது கவனமாக இருங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக இரண்டு மற்றும் நன்கு சக்கர வாகனங்களை ஓட்டும் போது மூடுபனி (Fog Lamps) விளக்குகளைப் பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் விமான மற்றும் ரயில் சேவைகளை பற்றி அடிக்கடி தெரிந்துகொண்டு உங்கள் பயணத்தை மேற்கொள்ளுங்கள் என்றும் IMD தனது X பக்கத்தில் தெரிவித்துள்ளது.

Kokila

Next Post

மகிழ்ச்சி...! இந்த முறை பொங்கல் பணம் ரூ.1,000 வரும் 4-ம் தேதி நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்படும்...!

Sun Dec 31 , 2023
புதுச்சேரியில் சிவப்பு ரேஷன் அட்டைதாரரர்களுக்கு பொங்கல் பண்டிகையை ஒட்டி வரும் 4-ம் தேதி ரூ.1,000 வழங்கப்படும்.‌ஒரு லட்சத்து 30,791 சிவப்பு ரேஷன் அட்டைதாரரர்களுக்கு வங்கிக் கணக்கில் தொகை செலுத்தப்படும்ம என களிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் அறிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்; மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறையினால் செயல்படுத்தப்பட்டு வரும், ஏழை மக்களுக்கான இலவச துணி வகைகள் வழங்கும் திட்டத்தின் கீழ், புதுச்சேரி […]

You May Like