புதுச்சேரியில் சிவப்பு ரேஷன் அட்டைதாரரர்களுக்கு பொங்கல் பண்டிகையை ஒட்டி வரும் 4-ம் தேதி ரூ.1,000 வழங்கப்படும்.ஒரு லட்சத்து 30,791 சிவப்பு ரேஷன் அட்டைதாரரர்களுக்கு வங்கிக் கணக்கில் தொகை செலுத்தப்படும்ம என களிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் அறிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்; மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறையினால் செயல்படுத்தப்பட்டு வரும், ஏழை மக்களுக்கான இலவச துணி வகைகள் வழங்கும் திட்டத்தின் கீழ், புதுச்சேரி குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை மூலம் பொங்கல் பரிசு தொகை வழங்கப்பட உள்ளது.
குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை வழங்கப்பட்ட வறுமை கோட்டிற்கு கீழ் வசிக்கும் குடும்ப உணவு பங்கீட்டு அட்டைதாரர்களில் அட்டவணை, பழங்குடியினர் இனமக்கள், மீனவர், நெசவாளர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தவிர புதுச்சேரியில் உள்ள 1,30,791 வறுமை கோட்டிற்கு கீழ் வசிக்கும் குடும்ப உணவு பங்கீட்டு அட்டைதாரர்களில் ஓர் நபர் கொண்ட அட்டைதாரர்களுக்கு ரூ.500 வழங்கப்படும்.
மேலும் இரண்டிற்கு மேற்பட்ட குடும்ப நபர்களை கொண்ட அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 விதம் நேரடியாக வங்கி கணக்கு மூலம் 04.01.2024 அன்று பயனாளர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.