“ விரைவில் தவெகவில் இணைய உள்ளேன்..” செங்கோட்டையனை சந்தித்த பின் பிரபல நடிகர் பேட்டி..

kas jeeva ravi 1

பிரபல குணச்சித்திர நடிகர் ஜீவா ரவி இன்று ஈரோட்டில் தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையனை சந்தித்து பேசினார்.. இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் தவெகவில் விரைவில் இணையப் போவதாக தெரிவித்தார்.. மேலும் “ நான் தற்போது உயிரோடு இருப்பதற்கு காரணமே செங்கோட்டையன் தான்.. எனவே தவெகவில் இணைந்த செங்கோட்டையனை சந்தித்து வாழ்த்து சொல்ல வந்தேன்..


மரியாதை நிமித்தமாக செங்கோட்டயனை சந்தித்தேன்.. நானும் விரைவில் தவெகவில் இணைய உள்ளேன்.. அது நாளை கூட நடக்கலாம்.. அல்லது அடுத்த மாதம் ஆகலாம்.. எதுவுமே நமது கையில் இல்லை.. விரைவில் செங்கோட்டையனுடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளேன்.. எங்கள் ஊரைப் பொறுத்த வரை செங்கோட்டையன் ஒரு காட் ஃபாதர் மாதிரி..

அவர் எந்த பாதையில் செல்கிறாரோ அதே பாதையில் நாங்களும் செல்ல தயாராக இருக்கிறோம்.. செங்கோட்டையன் தவெகவில் சேர்ந்தது எனது அப்பா சேர்ந்தது மாதிரி.. விஜய் சார் எனக்கு ரொம்ப பிடிக்கும்.. அவரின் துணிச்சல் மற்றும் பேச்சு பிடிக்கும்.. மக்களுக்கு நல்லது செய்யும் முடிவோடு அவர் அரசியலுக்கு வந்துள்ளார்.. நல்ல மனிதருக்கு நல்லதே நடக்கும்.. விஜய் சாரோட நான் நடித்திருக்கிறேன்.. மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று கூறிக் கொண்டிருப்பார்.. அதை செய்வார் என்று நம்புகிறேன்.. நல்லது யார் செய்தாலும் அங்கு நாம் இருப்போம்.. நமக்கு ஒரு நல்ல தலைவர் கண்டிப்பாக வேண்டும் ” என்று தெரிவித்தார்..

Read More : மதுரை புதிய மேம்பாலத்திற்கு வீரமங்கை வேலுநாச்சியர் பெயர் : முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

RUPA

Next Post

இண்டிகோ நெருக்கடி.. விமான டிக்கெட் விலை தாறுமாறு உயர்வு.. வரம்பை மீறினால் கடும் நடவடிக்கை .. மத்திய அரசு எச்சரிக்கை..

Sat Dec 6 , 2025
இண்டிகோ நெருக்கடி 5-வது நாளாக நீடித்து வரும் நிலையில், சனிக்கிழமை மட்டும் 400-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சூழலில், பயணிகள் மாற்று வழிகளை தேர்வு செய்யத் தொடங்கியதால், சில விமான நிறுவனங்கள் விமான கட்டணங்களை திடீரென அதிகரித்துள்ளன என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக விமான டிக்கெட் விலை 5 முதல் 6 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.. இந்த நிலையில் மத்திய அரசு […]
indigo flight cancellations government airfares rule 1765006234 1 1

You May Like