பாமக நிறுவனர் ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டி உள்ளது.. சமீபத்தில் பாமக தலைமை யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக ராமதாஸ் தரப்பு தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியிருந்தது.. இந்த சூழலில் பாமக தலைவர் அன்புமணி தான் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.. தலைவர் பதவியில் முரண்பாடுகள் தொடர்பாக நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் தெரிவித்திருந்தது..
இதை தொடர்ந்து பாமக தலைவராக அன்புமணியை ஏற்றதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் ராமதாஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் “ பாமக என்பது அங்கீகரிக்கப்படாத கட்சி.. அங்கீகரிக்கப்படாத கட்சியை பொறுத்த வரை, தேர்தல் ஆணையம் கட்சியின் உள்விவகாரங்களில் தலையிட்டு முடிவெடுக்க முடியாது.. உள்கட்சி விவகாரத்தில் கடிதங்களின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் முடிவெடுக்க முடியாது.. கட்சி உரிமை கோரல் விவகாரத்தில் தீர்வு வேண்டுமானால் உரிமையியல் நீதிமன்றத்தை நாடலாம் என்று ராமதாஸ் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது..
இந்த நிலையில் பாமக தலைவர் அன்புமணி மீது டெல்லி காவல்துறையில் ராமதாஸ் தரப்பு புகார் அளித்துள்ளது.. அன்புமணி தேர்தல் ஆணையத்தில் போலி ஆவணம் கொடுத்துள்ளார்.. எனவே மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கக் கோரி டெல்லி பாராளுமன்ற சாலை காவல் நிலையத்தில் ஜி.கே மணி நேரில் சென்று இந்த புகாரை அளித்துள்ளார். இந்த விவகாரம் மீண்டும் பாமகவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..
இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே மணி, தேர்தல் ஆணையமும் அன்புமணியும் ஒன்று சேர்ந்து கூட்டு சதியில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவித்தார்.. மேலும் ” அன்புமணிக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்திருப்பது மிகப்பெரிய மோசடி.. தேர்தல் ஆணையமே மோசடியில் ஈடுபட்டால் அரசியல் கட்சிகளுக்கு எப்படி தேர்தல் ஆணையம் மீது நம்பிக்கை வரும்..” என்று தெரிவித்தார்..
Read More : “ விரைவில் தவெகவில் இணைய உள்ளேன்..” செங்கோட்டையனை சந்தித்த பின் பிரபல நடிகர் பேட்டி..



