விஜய் உடன் நடந்த ரகசிய மீட்டிங்.. தவெக + காங்கிரஸ் கூட்டணி உறுதியா? செல்வப்பெருந்தகை பரபரப்பு தகவல்.!

Selvaperunthagai Vijay 1

கரூரில் துயர சம்பவத்திற்கு பின் தவெக உடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்க உள்ளதாக கூறப்பட்டது.. ராகுல் காந்தி தனிப்பட்ட முறையில் விஜய்யை அழைத்து பேசியதெ இதற்கு காரணம்.. மறுபுறம் திமுக கூட்டணியில் நாங்கள் தொடர்ந்து பின்னுக்குத் தள்ளப்படுகிறோம் என்ற குற்றச்சாட்டு காங்கிரஸின் சில மூத்த தலைவர்களிடையே ஒலிக்கிறது. மாணிக்கம் தாகூர், ஜோதிமணி போன்ற சில காங்கிரஸ் தலைவர்கள் திமுகவுடன் ஏற்பட்ட பிரச்சனைகளால் தவெகவை அணுகலாம் என்ற தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன..


திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறும் என்று கூறப்பட்ட நிலையில், கூட்டணி தொடர்பாக ஐவர் குழுவை காங்கிரஸ் அமைத்தது.. இதனால் இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. எனினும் இந்த கூட்டணி பேச்சுவார்த்தையில் அதிக தொகுதிகளை வழங்காத பட்சத்தில் காங்கிரஸ் தவெக உடன் கூட்டணி அமைக்கலாம் என்று கூறப்படுகிறது..

இதனிடையே தவெக நிர்வாகி அருண்ராஜை காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி சந்தித்து பேசினார்.. அதே போல் சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரை செங்கோட்டையன் சந்தித்து பேசினார்..

இந்த சூழலில் சென்னையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யை ராகுல்காந்தியின் வியூக வகுப்பாளர் பிரவீன் சக்ரவர்த்தி சந்தித்து பேசினார்.. சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள விஜய்யின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.. இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ திமுக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.. இந்தியா கூட்டணி வலிமையாக இருக்கிறது, ஒற்றுமையாக இருக்கிறது.. பலமாக இருக்கிறது.. பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.. பிரவீன் சக்ரவர்த்தி விஜய்யை சந்தித்து பேசியது பற்றி எனக்கு தெரியாது.. நான் மாநில தலைவராக இருக்கிறேன். தேசிய தலைமை இதை பற்றி எங்களிடம் சொல்லவில்லை.. நாங்கள் யாருக்கும் விஜய் உடன் அனுமதி கொடுக்கவில்லை..

காங்கிரஸ் அமைத்த ஐவர் குழு மரியாதை நிமித்தமாக முதல்வரை சந்தித்துள்ளது.. கூட்டணி பேச்சுவார்த்தைக்காக தான் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.. நாங்கள் யாரிடமும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை திமுக உடன் மட்டும் தான் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.. இந்தியா கூட்டணி யாராலும் சிதைக்க முடியாத கூட்டணி.. ஒரு திருமண வீட்டிற்கு சென்ற போது திருநாவுக்கரசரை செங்கோட்டையன் சந்தித்தார். ஜோதிமணியை, தவெக நிர்வாகி அருண் ராஜ் சந்தித்து தற்செயலாக நடந்த ஒன்று.. இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது..” என்று தெரிவித்தார்..

Read More : அன்புமணிக்கு செக் வைத்த ராமதாஸ்; டெல்லி காவல்நிலையத்தில் பரபரப்பு புகார்..!

RUPA

Next Post

அம்பேத்கர் வழியில் மதச்சார்பின்மையைப் பேணிப் பாதுகாப்போம்.. தவெக தலைவர் விஜய் பதிவு..!

Sat Dec 6 , 2025
இந்திய அரசியலமைப்பு சட்டத்தை இயற்றிய சட்ட மேதை பி.ஆர் அம்பேத்கரின் 70-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.. இந்த நாளில் அம்பேத்கரின் சிலை மற்றும் திருவுருவப் படங்களுக்கு அரசியல் தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.. மேலும் சமத்துவக் கொள்கைகள், சமூக நீதிக்கான போராட்டம், தாழ்த்தப்பட்ட சமூகங்களுக்கு உரிமை பெற்றுத்தந்த பங்களிப்புகள் ஆகியவற்றை நினைவு கூர்ந்து வருகின்றனர். பிரதமர் மோடி, குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, தமிழக முதல்வர் […]
vijay ambedkar 2

You May Like