பிரபல ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனமான வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தை நெஃபிளிக்ஸ் நிறுவனம் வாங்கப் போகிறது.. இதற்காக 7 லட்சம் கோடி ரூபாய்க்கு நெட்ஃபிளிக்ஸ் OTT வாங்குவதற்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது.
ஸ்ட்ரீமிங் ஜாம்பவான் நெட்ஃபிளிக்ஸ்Netfilx, வார்னர் பிரதர்ஸின் (Warner Bros) டிவி, திரைப்பட ஸ்டுடியோக்கள் மற்றும் ஸ்ட்ரீமிங் பிரிவை கையகப்படுத்த ஒரு பெரிய ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. 1923 ஆம் ஆண்டு 4 சகோதரர்களால் நிறுவப்பட்ட வார்னர் பிரதர்ஸ், ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக அதன் தரமான ஒளிபரப்புகளால் உலகம் முழுவதும் உள்ள மக்களின் இதயங்களை வென்றுள்ளது.
இந்த சூழ்நிலையில், வார்னர் பிரதர்ஸ் விற்பனைக்கு வைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானவுடன், உலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் அந்த நிறுவனத்தை வாங்க போட்டியிட்டன.
இதில், நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தை 72 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு அல்லது இந்திய ரூபாயில் 7 லட்சத்து 43 ஆயிரத்து 630 கோடிக்கு வாங்குவதற்கான ஒப்பந்தம் இறுதியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 12 முதல் 18 மாதங்களில் நெட்ஃபிளிக்ஸ் இந்தத் தொகையை வார்னர் பிரதர்ஸ் உரிமையாளர்களுக்கு செலுத்தும்.
அதன் பிறகு, வார்னர் பிரதர்ஸ் தயாரித்து வெளியிட்ட ஹாரி பாட்டர் படங்கள், டிசி சூப்பர் ஹீரோ படங்கள், கேம் ஆஃப் த்ரோன்ஸ் உள்ளிட்ட வலைத் தொடர்கள், ஸ்கூபி டூ, டாம் அண்ட் ஜெர்ரி காமிக்ஸ், எச்பிஓ மேக்ஸ் ஓடிடி தளம் மற்றும் டிஸ்கவரி சேனல் ஆகியவற்றின் உரிமைகள் நெட்ஃபிக்ஸ் நிறுவனத்திற்குச் செல்லும்.
இது நெட்ஃபிக்ஸ் நிறுவனத்தை பொழுதுபோக்கு துறையில் ஒரு மாபெரும் நிறுவனமாக மாற்றும் என்றும், ஹாலிவுட்டில் மிகவும் மதிப்புமிக்க உள்ளடக்கத் தொகுப்பைக் கொண்ட நிறுவனமாக அதன் நிலையை மேலும் வலுப்படுத்தும் என்றும் ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.



