3 குழந்தைகள் உட்பட 11 பேர் பலி.. 14 காயம்..! விடுதியில் துப்பாக்கிச்சூடு; தென் ஆப்பிரிக்காவில் பயங்கரம்!

south africa shooting

தென் ஆப்பிரிக்காவின் தலைநகர் பிரேட்டோரியாவில் உள்ள ஒரு விடுதிக்குள் இன்று (டிசம்பர் 6, 2025) திடீரென வந்த ஆயுதநபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் சட்டவிரோதமாக மது விற்கப்பட்டதாக கூறப்படும் அந்த இடத்தில் 3 குழந்தைகள் உள்ளிட்ட மொத்தம் 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று போலீஸ் தெரிவித்தது.


மேலும் 14 பேர் துப்பாக்கி காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். காயமடைந்தவர்களின் வயது குறித்து போலீஸ் விவரங்களை வெளியிடவில்லை.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் பிரிட்டோரியாவின் மேற்கு பக்கத்தில் உள்ள சோல்வ்ஸ்வில் (Saulsville) என்ற டவுன்ஷிப்பில், சனிக்கிழமை அதிகாலை நேரத்தில் நடைபெற்றது.

இந்த சம்பவத்தில் 3 வயது சிறுவன், 12 வயது சிறுவன் மற்றும் 16 வயது சிறுமி என 3 குழந்தைகள் உயிரிழந்தனர்… இந்த தாக்குதலுக்குப் பொறுப்பான மூன்று சந்தேக நபர்களை போலீஸ் தேடி வருகிறது.

6.3 கோடி மக்கள் தொகை கொண்ட தென் ஆப்பிரிக்காவில் சமீப காலங்களில் பொதுவெளியில் துப்பாக்கிச்சூடு நடத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.. உலகில் மிக அதிக கொலைவிகிதம் உள்ள நாடுகளில் ஒன்றாக திகழும் இந்த நாட்டில் ஏற்பட்டிருக்கும் இந்த தொடர் தாக்குதல்கள் மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது..

உலகில் அதிக கொலைவிகிதம் கொண்ட நாடுகளில் ஒன்றான தென் ஆப்பிரிக்காவில், 2024 ஆம் ஆண்டில் மட்டும் 26,000க்கும் மேற்பட்ட கொலைகள் பதிவானது.. அதாவது பொருள் தினமும் 70-க்கும் மேற்பட்ட கொலைகள் நடக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

RUPA

Next Post

“சென்னையில் ரூ.5,000 கோடியை ஏப்பம் விட்ட திமுக தமிழகம் முழுவதும் இதை செய்யப் போகுது..” விளாசிய அண்ணாமலை!

Sat Dec 6 , 2025
தமிழக மக்கள், விவசாயிகள் வாழ்க்கையை அழிக்க வழிகோலும் இந்த வருவாய்த்துறை அரசாணைகளை உடனடியாக, திமுக அரசு திரும்பப் பெற வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் “ சென்னை, கோயம்புத்தூர், ஈரோடு, மதுரை, சேலம், திருச்சி, வேலூர் என பெரிய மாநகரங்கள் அமைந்துள்ள மாவட்டங்கள் அனைத்திலும், நீர்நிலைகளை ஆக்கிரமித்திருப்பவர்களுக்கும், திமுகவினருக்கும் பட்டா வழங்க, திமுக அரசு கடந்த டிசம்பர் 2, 2025 அன்று வருவாய்த்துறை […]
TN CM MK Stalin BJP State president Annamalai 1

You May Like