மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 2026-ம் ஆண்டுக்கான அகில இந்திய அளவிலான போட்டித் தேர்விற்கான அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் உதவி செயலாளர், உதவிப் பேராசிரியர், கணக்கு அதிகாரி, மேற்பார்வையாளர், ஜூனியர் மொழிபெயர்ப்பாளர், ஜூனியர் கணக்காளர், ஜூனியர் உதவியாளர் உள்ளிட்ட பதவிகளில் மொத்தம் 124 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
காலிப்பணியிடங்கள்:
உதவி செயலாளர் – 8
உதவிப் பேராசிரியர் (Academics) – 12
உதவிப் பேராசிரியர் (Training) – 8
உதவிப் பேராசிரியர் (Skill Education) – 7
கணக்கு அதிகாரி – 2
மேற்பார்வையாளர் – 27
ஜூனியர் மொழிப்பெயர்பாளர் – 9
ஜூனியர் கணக்காளர் – 16
ஜூனியர் உதவியாளர் – 35
கல்வித்தகுதி மற்றும் வயது வரம்பு:
* உதவி செயலாளர் பதவிக்கு, ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். இந்தப் பதவிக்கு 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
* உதவிப் பேராசிரியர் பதவிக்கு, ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் முதுகலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் B.Ed / M.Ed / NET / SLET / NET-JRF / முனைவர் பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
வயது வரம்பு 30 வயது வரை.
* கணக்கு அதிகாரி பதவிக்கு, பொருளாதாரம், வணிகம், கணக்கியல், நிதி, வணிக ஆய்வுகள், செலவு கணக்கியல் போன்ற பாடப்பிரிவுகளில் இளங்கலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் SAS / JAO(C) தகுதி, முதுகலை பட்டப்படிப்பு அல்லது MBA / CA / ICWA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்தப் பதவிக்கு 35 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
* மேற்பார்வையாளர் பதவிக்கு, இளங்கலை பட்டப்படிப்பு அவசியம். கணினி பயன்பாட்டில் திறன் இருந்திருக்க வேண்டும். வயது வரம்பு 30 வயது வரை.
* ஜூனியர் மொழிபெயர்ப்பாளர் அதிகாரி பதவிக்கு, இந்தி மற்றும் ஆங்கிலம் மொழிகளில் முதுகலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். வயது வரம்பு 30 வயது வரை.
* ஜூனியர் கணக்காளர் பதவிக்கு, 12-ம் வகுப்பு கல்வித் தகுதி இருந்திருக்க வேண்டும். தட்டச்சு திறன் அவசியம். வயது வரம்பு 27 வயது வரை.
* ஜூனியர் உதவியாளர் பதவிக்கு, 12-ம் வகுப்பு கல்வித் தகுதி மற்றும் தட்டச்சு திறன் தேவையானது. வயது வரம்பு 27 வயது வரை.
தேர்வு செய்யப்படும் முறை: இப்பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
பதவி வாரியான தேர்வு முறை: மேற்பார்வையாளர், ஜூனியர் கணக்காளர், ஜூனியர் உதவியாளர் பதவிகளுக்கு நேர்காணலுக்கு பதிலாக திறன் தேர்வு (Skill Test) நடைபெறும். ஜூனியர் மொழிப்பெயர்பாளர் பதவிக்கு முதல்நிலை மற்றும் முதன்மை தேர்வுகள் மட்டும் நடைபெறும். நேர்காணல் இல்லை.
மற்ற பதவிகளுக்கான தேர்வு விவரங்கள் மற்றும் தேர்வு தேதிகள் தொடர்பான கூடுதல் தகவல்கள் CBSE-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பளம்:
உதவி செயலாளர், உதவிப் பேராசிரியர், கணக்கு அதிகாரி ஆகிய பதவிகளுக்கு நிலை 10 கீழ் சம்பளம் வழங்கப்படும்.
மேற்பார்வையாளர், ஜூனியர் மொழிப்பெயர்பாளர் ஆகிய பதவிகளுக்கு நிலை 6 கீழ் சம்பளம் வழங்கப்படும்.
ஜூனியர் கணக்காளர், ஜூனியர் உதவியாளர் ஆகிய பதவிகளுக்கு நிலை 2 கீழ் சம்பளம் வழங்கப்படும்.
எப்படி விண்ணப்பிப்பது? இப்பணியிடங்களுக்கு ஆர்வமாக உள்ளவர்கள் https://www.cbse.gov.in/cbsenew/recruitment.html என்ற இணையதளத்தில் உள்ள ஆன்லைன் லிங்கின் மூலம் நேரடியாக விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 22.12.2025.
Read more: வீட்டில் இருந்த சிறுவனை கவ்வி சென்ற சிறுத்தை.. புதருக்குள் கிடந்த சடலம்.. வால்பாறையில் அதிர்ச்சி..!!



