இந்திய ரயில்வேயில் உள்ள 2,569 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி, கடந்த அக்டோபர் 31ஆம் தேதி முதல் விண்ணப்ப நடைமுறை தொடங்கியது. இதில் ஜூனியர் இன்ஜினியர், டிப்போ மெட்டீரியல் சூப்பர்வைசர், வேதியியல் மற்றும் உலோகவியல் உதவியாளர் ஆகிய பதவிகளுக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இந்தப் பணியிடங்களுக்கு பொறியியல் டிப்ளமோ மற்றும் டிகிரி தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்நிலையில், அறிவிப்பில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதையடுத்து, தேர்வர்களுக்கு கூடுதல் அவகாசம் அளிக்கும் நோக்கில் விண்ணப்பிக்கும் கடைசி தேதி டிசம்பர் 10 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது: 18 ஆண்டுகள்
அதிகபட்ச வயது: 33 ஆண்டுகள்
பிறந்த தேதி 01.01.2008க்கு பிறகாக இருக்கக்கூடாது
பிரிவுகள் வாரியாக அதிகபட்ச பிறந்த தேதி:
பொதுப்பிரிவு: 02.01.1993க்கு முன்னர் பிறந்திருக்கக் கூடாது
ஒபிசி பிரிவு: 02.01.1990க்கு முன்னர் பிறந்திருக்கக் கூடாது
எஸ்சி / எஸ்டி பிரிவு: 02.01.1988க்கு முன்னர் பிறந்திருக்கக் கூடாது
அரசு விதிமுறைகளின்படி, வயது வரம்பில் தளர்வு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி:
ஜூனியர் இன்ஜினியர்: மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், சிவில், உற்பத்தி, தொழிற்சாலை மிஷின், இன்ஸ்ட்ரூமெண்டேஷன், ஆட்டோமொபைல் உள்ளிட்ட பல்வேறு பொறியியல் பாடப்பிரிவுகள் மற்றும் அதனைச் சார்ந்த துறைகளில் 3 ஆண்டு டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும். அதேபோல், இந்தப் பாடப்பிரிவுகளில் B.E / B.Tech பட்டப்படிப்பு முடித்தவர்களும் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
டிப்போ பொருள் கண்காணிப்பாளர்: ஏதேனும் ஒரு பொறியியல் பாடப்பிரிவில் 3 ஆண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
வேதியியல் / உலோகவியல் உதவியாளர்: இயற்பியல் அல்லது வேதியியல் பாடங்களில் 45 சதவீத மதிப்பெண்களுடன் இளங்கலை அறிவியல் (B.Sc) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: 7வது ஊதிய குழுவின் அடிப்படையில் நிலை 6 கீழ் ரூ.35,400 தொடக்க சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எப்படி விண்ணப்பிப்பது? ரயில்வே ஜூனியர் இன்ஜினியர் பதவிக்கு தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் https://www.rrbchennai.gov.in/ என்ற சென்னை ரயில்வே ஆட்சேர்ப்பு இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி நாள் 10.12.2025.
Read more: இந்தியாவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.. தலைசுற்ற வைக்கும் சொத்து மதிப்பு..!



