உலகின் மிக சக்திவாய்ந்த நாடுகள்: டாப் 10 லிஸ்டில் அமெரிக்கா, சீனா முன்னிலை; இந்தியா எந்த இடத்தில் உள்ளது?

Top 10 countries

உலகின் சக்திவாய்ந்த நாடுகள் எப்போதும் உலக அரசியல், பொருளாதாரம், பாதுகாப்பு விவாதங்களில் முக்கிய இடம் பிடித்து வருகின்றன. இந்த பாதுகாப்பு பட்ஜெட்டுகள், வெளிநாட்டு கொள்கைகள் ஆகியவற்றை கவனித்துக் கொண்டே உலக அமைப்பை வடிவமைக்கின்றன. இந்த நாடுகள் எதை உறுதி செய்கிறதோ, அதை மற்ற நாடுகள் நம்பிகையுடனோ அல்லது பயத்தோடோ ஏற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.


அமெரிக்க செய்தி உலக அறிக்கை (US News & World Report) வெளியிட்ட 2025 உலகின் சக்திவாய்ந்த நாடுகள் பட்டியலின் படி, பல நாடுகள் பொருளாதார வலிமை, அரசியல் செல்வாக்கு, பாதுகாப்பு திறன் ஆகியவற்றின் சமநிலையைப் பேணிக் கொண்டு உலக அதிக்கட்டிற்கு போட்டியிடுகின்றன. உலகின் டாப் 10 சக்தி வாய்ந்த நாடுகள் என்னென்ன என்று பார்க்கலாம்..

2025 உலகின் மிக சக்திவாய்ந்த நாடுகள்

இந்த பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும், சீனா 2-வது இடத்திலும், ரஷ்யா 3-வது இடத்திலும் சவுதி அரேபியா 9ஆம் இடத்தில், இஸ்ரேல் 10ஆம் இடத்தில் இடம்பெற்றுள்ளது.

அமெரிக்கா:

பல்துறை தொழில்துறை வளர்ச்சி, பெரும் பாதுகாப்புச் செலவுகள், வலுவான IT துறை ஆகியவற்றால் உலகின் மிகப்பெரிய சக்தியாக தொடர்கிறது. உலக பொருளாதார அமைப்பிலும் முன்னணி பங்கு வகிக்கிறது. உலகின் சக்தி வாய்ந்த நாடுகள் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது..

சீனா:

செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட தொழில்நுட்ப துறைகளில் வலுவான நிலை, பொருளாதார உயர்வு ஆகியவை காரணமாக சீனா 2-வது இடத்தில் உள்ளது..

ரஷ்யா:

இயற்கை வளங்கள், குறிப்பாக எரிவாயு மற்றும் எண்ணெய், மேலும் சக்திவாய்ந்த ராணுவ திறன் ஆகியவை காரணமாக ரஷ்யா 3 -வது இடத்தில் உள்ளது..

யுனைடெட் கிங்டம் (UK)

உலகளவில் ஒரு பெரும் ஸ்டார்ட்அப் மையமாக வேகமாக உருவெடுத்து வருகிறது. தொழில்நுட்ப நிறுவனங்கள், புதுமை, முதலீடுகள் ஆகியவற்றில் UK வின் முன்னேற்றம் குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த நாடு 4-வது இடத்தில் உள்ளது..

ஜெர்மனி

பச்சை ஆற்றல் (Green Energy) துறையில் முன்னணியில் உள்ளது. புதுப்பிக்கத்தக்க ஆற்றல், சுற்றுச்சூழல் தொழில்நுட்பங்கள் போன்றவற்றில் ஜெர்மனி உலகுக்கு முன்னுதாரணம் காட்டுகிறது. எனவே உலகின் சக்தி வாய்ந்த நாடுகள் பட்டியலில் ஜெர்மனி 5-வது இடத்தில் உள்ளது..

பிரான்ஸ்

தன் தொழில் பகுதிகளை (industrial zones) நவீனப்படுத்த அதிக முதலீடு செய்கிறது. தொழில்துறை உற்பத்தியை மேம்படுத்தவும், போட்டித்திறனை உயர்த்தவும் பிரான்ஸ் பல மாற்றங்களை கொண்டு வருகிறது. இதன் மூலம் பிரான்ஸ் 6வது இடத்தில் உள்ளது..

ஜப்பான் மற்றும் தென் கொரியா

உலகின் சக்தி வாய்ந்த நாடுகள் பட்டியலில் இந்த இரண்டு ஆசிய நாடுகளும் இடம்பெற்றுள்ளன. ஜப்பான், வயது முதிர்ந்த மக்கள்தொகை காரணமாக சவால்கள் இருந்தாலும், செமிகண்டக்டர் (semiconductor) உற்பத்தி, மின்சார வாகனங்கள் (Electric Vehicles) போன்ற துறைகளில் மிகப்பெரிய முதலீடுகள் செய்து வருகிறது. இதனா ஜப்பான் இந்த பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது.

தென் கொரியா

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (Renewable Energy) துறையில் வேகமாக முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. உலகளவில் பசுமை தொழில்நுட்பத்தில் முன்னணி நாடாக மாறிக்கொண்டிருக்கிறது. எனவே இந்த நாடு 8-வது இடத்தில் இருக்கிறது.

சவுதி அரேபியா

சுற்றுலா மற்றும் எண்ணெய் துறைகளில் அதிகமான தேவை காரணமாக, அதன் சொத்துக்கள் மற்றும் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது. இதனால் சவுதி இந்த பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது.

இஸ்ரேல்

புதிய தொழில்நுட்பங்களில் முன்னேற்றம், வலுவான பாதுகாப்பு (defence) திறன்
இவற்றால் நாட்டின் வளர்ச்சி அதிகரித்து வருகிறது. இஸ்ரேல் இந்த பட்டியலில் 10-வது இடத்தில் இருக்கிறது..

இந்தியா டாப் 10 நாடுகளில் இடம் பெறவில்லை — காரணம் என்ன?

உலகின் மிக அதிக மக்கள் தொகை கொண்ட நாடும், ஐந்தாவது பெரிய பொருளாதாரமும் ஆன இந்தியா, இந்த ஆண்டின் உலகின் ‘மிகவும் சக்திவாய்ந்த நாடுகள்’ பட்டியலில் முதல் பத்திற்குள் இடம்பிடிக்கவில்லை.
இந்தியா 12வது இடத்தில் உள்ளது.

இந்தியாவின் கணக்கிடப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 3.55 டிரில்லியன் அமெரிக்க டாலர், மேலும் மக்கள் தொகை 1.43 பில்லியன் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உலக தரவரிசை எந்த அடிப்படையில்?

உலகின் மிகச் சக்திவாய்ந்த நாடுகளைத் தீர்மானிக்கும் இந்த தரவரிசை ஐந்து முக்கிய காரணிகளை அடிப்படையாகக் கொண்டது:

பொருளாதார வலிமை

அரசியல் செல்வாக்கு

வலுவான சர்வதேச கூட்டணிகள்

படைத் திறன்

உலகளாவிய தாக்கம்

இந்த தரவரிசை அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் வார்டன் ஸ்கூல் (Wharton School) பேராசிரியர் டேவிட் ஜே. ரைப்ஸ்டீன், ஆராய்ச்சி குழு மற்றும் அமெரிக்க செய்தி மற்றும் உலக அறிக்கை (US News & World Report)ஆகியவற்றால் தயாரிக்கப்பட்டது..

Read More : ஜப்பானை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. பதற வைக்கும் ‘திக் திக்’ வீடியோக்கள் வைரல்..!

English Summary

Let’s see what the top 10 most powerful countries in the world are..

RUPA

Next Post

ABC juice: குளிர்காலத்தில் இந்த ஒரு ஜூஸை குடித்தால் ஒரு முடி கூட உதிராது.. முகமும் ஜொலிக்கும்..!!

Tue Dec 9 , 2025
ABC juice: If you drink this juice in winter, not a single hair will fall out.. and your face will also glow..!!
abc juice

You May Like