பிரபல பேச்சாளரும் திராவிட இயக்க சிந்தனையாளருமான நாஞ்சில் சம்பத் திமுக, மதிமுக, அதிமுக, அமமுக என பல கட்சிகளில் இருந்தவர்.. ஆனால் சில ஆண்டுகளாக எந்த கட்சியிலும் இல்லாமல் திராவிட கொள்கைகளை பற்றி பேசி வந்தார்..
இந்த நிலையில் நாஞ்சில் சம்பத் கடந்த விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.. மதிமுக, அதிமுக, திமுகவை தொடர்ந்து தற்போது தமிழக வெற்றிக்கழகத்தில் நாஞ்சில் சம்பத் இணைந்தார்.. அவருக்கு தவெகவின் பரப்புரைச் செயலாளர் (Campaign Secretary) பொறுப்பு வழங்கப்பட்டது..
இந்த நிலையில் நாஞ்சில் சம்பத் தவெகவில் இணைந்தது குறித்து தவெகவின் முன்னாள் செய்தித் தொடர்பாளரும், அரசியல் விமர்சகருமான ஜெகதீஸ்வரன் பேசி உள்ளார்.. இது குறித்து பிரபல யூ டியூப் சேனலுக்கு பேட்டியளித்த அவர் “ நாஞ்சில் சம்பத் போன்றவர்கள் ஒரு கட்சிக்கு போனால் அந்த தலைவரை உயர்த்தி வைத்து பேசுவார்.. கட்சியில் இருந்து விலகிய பின்னர் தரம் தாழ்ந்து பேசுவார்கள்.. இதே நாஞ்சில் சம்பத் தற்போது விஜய்யை மாமனிதர் என்று பேசுகிறார்.. அவரே சில மாதங்களில் கட்சியில் இருந்து விலகிய பின்னர் விஜய் எல்லாம் ஒரு மனுஷனா? என்று பேசுவார்.. ஏன் நான் தெரியாத்தனமாக அந்த இயக்கத்தில் மாட்டிக் கொண்டேன்.. அவர் ஒரு தறுதலை என்று கூட பேசுவார்.. நாஞ்சில் சம்பத் நிச்சயம் தவெகவில் இருந்து வேளியேறுவார்..
தவெக கூட்டத்தில் தமிழில் பேசினாலே ஒருமாதிரி பார்ப்பார்கள்.. நீங்கள் தளபதி, டிவிகே, டிவிகே என்று தான் பேச வேண்டும்.. அவர் அப்படி பேசுவாரா? அது பொருந்தாத இடம்.. இதே பிரச்சனை தான் நாஞ்சில் சம்பத்திற்கும் நடக்கும்.. நாஞ்சில் சம்பத், செங்கோட்டையன் போன்றவர்கள் வயதாகிவிட்டால் அரசியலில் இருந்து ஓய்வு பெறலாம்.. தேவையில்லாமல் கெட்ட பெயர் சம்பாதிக்க வேண்டும் என்ற அவசியம் என்ன? ஒரு கட்சியில் 50 ஆண்டுகள் இருந்தார்..
கடைசியாக 6 மாதங்கள் தற்குறியாக வாழ்ந்து மடிந்தா என்ற வரலாறு மடிந்தார் என்று தான் செங்கோட்டையனின் வரலாறு இப்படி தான் இருக்கும்.. அறிவே இல்லாத கட்சியில் ஏன் போய் சேர்கிறீர்கள். கையை கடிப்பவனிடமும், மரம் ஏறுபவனிடமும் திராவிடம் பற்றி பேசி புரிய வைக்க முடியுமா? விஜய் படத்தை வேண்டுமானால் தவெக தொண்டர்களிடம் பேசலாம்..” என்று தெரிவித்தார்..
Read More : அதிமுகவில் இணையும் செங்கோட்டையனின் அண்ணன் மகன்.. கோபியில் EPS போடும் மாஸ்டர் ப்ளான்..!!



