கோவாவின் அர்போராவில் ஏற்பட்ட தீ விபத்தில் 25 பேர் உயிரிழந்ததற்கு காரணமான, இரவு விடுதி இடித்து தரைமாக்கப்பட்டது.
வடக்கு கோவாவின் அர்போரா கிராமத்தில் உள்ள பிரபலமான பார்ட்டி இடமான பிர்ச் பை ரோமியோ லேன், கடந்த சனிக்கிழமை இரவு வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 25 பேர் உயிரிழந்தனர். இறந்தவர்களில் பெரும்பாலோர் ஊழியர்கள் மற்றும் சில சுற்றுலாப் பயணிகள் ஆவர்.. இந்த தீ விபத்து நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.. இந்த உணவகம் அரசாங்கத்திற்குச் சொந்தமான நிலத்தில் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டது.. எனினும் கடந்த வாரம் தீ விபத்து ஏற்பட்ட பிறகு இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்தது.
இந்த குடில் சவுரப் லூத்ரா மற்றும் கௌரவ் லூத்ராவுக்குச் சொந்தமான மூன்றாவது சொத்து. சனிக்கிழமை நள்ளிரவில் அர்போராவில் உள்ள ‘பிர்ச் பை ரோமியோ லேன்’ இரவு விடுதியில் ஏற்பட்ட பெரிய தீ விபத்தில் 25 பேர் கொல்லப்பட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு அவர்கள் தாய்லாந்துக்கு தப்பி ஓடிவிட்டனர்..
இரவு விடுதியை இடிக்க முதல்வர் சாவந்த் உத்தரவு
இந்த நிலையில் இந்த சட்டவிரோத ‘ரோமியோ லேன்’ என்ற இரவு விடுதியை அனைத்து சம்பிரதாயங்களையும் முடித்த பின்னர் இடிக்க கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்படி, இந்த இரவு விடுதி இன்று புல்டோசர்களால் இடித்து தரைமாக்கபப்ட்டது..
லூத்ரா சகோதரர்களுக்கு ப்ளூ கார்னர் நோட்டீஸ்
சனிக்கிழமை இரவு தீ விபத்துக்குப் பிறகு, மாவட்ட நிர்வாகம் இந்த கடற்கரை விடுதியையும், வடக்கு கோவாவில் உள்ள அசாகோவில் உள்ள மற்றொரு விடுதியையைம் நேற்று வைத்தது. சௌரப் மற்றும் கௌரவ் லூத்ராவுக்கு எதிராக இண்டர்போல் ப்ளூ கார்னர் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பொதுநல வழக்கு
ரோமியோ லேன்’ இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து நீதிமன்ற மேற்பார்வையில் விசாரணை நடத்தக் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தின் கோவா பெஞ்சில் ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. சமூக ஆர்வலர் ஐஸ்வர்யா சல்கோன்கர் தாக்கல் செய்த மனுவில், இரவு விடுதி செல்லுபடியாகும் கட்டுமான உரிமம் இல்லாமல் இயங்கி வருவதாகவும், அதற்கு எதிராக பல இடிப்பு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்ட போதிலும் இயங்கி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
கிளப்புக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் அதிகாரிகள் தோல்வி அடைந்துள்ளனர் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது. அவசர விசாரணை கோரி செவ்வாய்க்கிழமை நீதிபதிகள் சாரங் கோட்வால் மற்றும் ஆஷிஷ் சவான் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, டிசம்பர் 16 ஆம் தேதி இந்த வழக்கை விசாரணைக்கு பட்டியலிடுவதாக தெரிவித்தனர்..
Read More : இனி 1, 2 ரூபாய் நாணயங்கள் செல்லாதா? ரிசர்வ் வங்கி முக்கிய அப்டேட்; கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!



