பாகிஸ்தான் இராணுவத்தின் ஊடக பிரிவின் (Inter-Services Public Relations -ISPR)-இன் தலைமை இயக்குநராக உள்ள லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷரீஃப் சௌத்ரி சமீபத்தில் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். காரணம்—ஒரு பத்திரிகையாளர் கேள்வி எழுப்பும் போது அவரை பார்த்து கண்ணடித்த (wink) ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பரவியது.
வீடியோவில் என்ன நடந்தது?
பத்திரிகையாளர் அப்ஸா கோமல் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில், சௌத்ரியிடம் வரிசையாக கடினமான கேள்விகளை எழுப்புகிறார். அவர், முன்னாள் பிரதமர் இம்ரான் கான் குறித்து சௌத்ரி முன்வைத்த குற்றச்சாட்டுகளைப் பற்றி கேட்கிறார், “தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்” “எதிர்-ராஜ்ய செயல்கள்”, “டெல்லியின் கையில் செயல்படுகிறார்” என்ற குற்றச்சாட்டுகள் குறித்து கேள்வி எழுப்பினார்..
“இது முந்தையதை விட எவ்வாறு வேறுபடுகிறது? அல்லது இனி ஏதாவது புதிய மாற்றம் எதிர்பார்க்க முடியுமா?” என்று கேள்வி எழுப்பினார்.. இதற்கு சௌத்ரி பதிலாக, கிண்டலாக, “நான்காவது புள்ளியும் சேர்த்துக் கொள்ளுங்கள்,அவர் ‘மனநலம் பாதித்தவர்’ என்று கூறி புன்னகைத்து, பெண் பத்திரிகையாளரை பார்த்து கண்ணடிக்கிறார். இந்த வீடியோவை எந்த ஊடகமும் தனிப்பட்ட முறையில் சரிபார்க்கவில்லை.
சர்ச்சை எப்படி வெடித்தது?
வீடியோ வெளிவந்தவுடனே சமூக ஊடகங்களில் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.. “இவர் ஒரு ராணுவ அதிகாரி போல நடந்து கொள்ளவில்லை.” என்று தெரிவித்தனர்.. அணிந்து உட்கார்ந்தபடி இப்படிப் பொது மேடையில் கண் சிமிட்டுவது எப்படி?” இவர் பாகிஸ்தான் இராணுவத்தின் ஜெனரல்… இவர்களிடம் இருந்தே நாட்டின் நிலை இப்படி.” என்ற கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்..
சௌத்ரியின் பின்புலம் – ஏன் அவர் மீது இவ்வளவு கவனம்?
அகமது ஷரீஃப் சௌத்ரி சமீப மாதங்களில் பாகிஸ்தான் இராணுவத்தின் “முக்கிய முகம்” போலவே உயர்த்தப்பட்டவர். இந்தியாவை குறிவைக்கும் பேச்சுகள், ஆவேசமான பத்திரிகையாளர் சந்திப்புகள், அரசியல் விஷயங்களில் நேரடியாக பதில்கள், இவற்றால் இவர் அடிக்கடி சர்ச்சைக்கு உள்ளாகிவருகிறார்.
மேலும், அவரது தந்தை சுல்தான் பஷீருத்தின் மஹ்மூத்—ஒசாமா பின் லாடனின் அருகில் இருந்தவர், தீவிரவாத தொடர்புகள் காரணமாக பாகிஸ்தானில் ‘தீவிரவாதி’ என அறிவிக்கப்பட்டவர் என்பதும் மீண்டும் மீண்டும் பேசப்படுகிறது.
இம்ரான் கான் மீது சௌத்ரியின் கடும் தாக்குதல்
இதே பத்திரிகையாளர் சந்திப்பில், சௌத்ரி முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது மிகக் கடுமையாக விமர்சித்தார்.. அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர், பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பை பாதிக்கும் வகையில் திட்டமிட்ட சதி உருவாக்குகிறார். அவர் இம்ரான் கான் X (Twitter)ல் போடும் பதிவுகளை எடுத்துக் காட்டி, “இது பாகிஸ்தான் இராணுவத்திற்கு எதிராக ஒரு திட்டமிட்ட கதை கட்டும் முயற்சி” என்று குற்றம் சாட்டினார்.
இம்ரான் கானின் பதில்
இம்ரான் கான் சில நாட்களுக்கு முன், இராணுவ தலைமைத் தளபதி அசிம் முனீரை “மனநிலையற்றவர்” என்று அழைத்தார். “பாகிஸ்தானில் சட்டமும் அரசியலமைப்பும் முற்றிலும் குழம்பி போனதற்கு காரணம் அவர் தான் என்று குற்றம்சாட்டினார்.
இதற்கான பதிலடியாகவே சௌத்ரி இவ்வளவு கடும் வார்த்தைகளை பயன்படுத்தியதாக பார்க்கப்படுகிறது. சௌத்ரி மேலும் கூறியது “ இந்திய ஊடகங்கள், இந்திய உளவுத்துறையான RAW-க்கு இணைந்த கணக்குகள், ஆப்கான் சமூக ஊடக வலைத்தளங்கள் இம்ரான் கானின் இராணுவ-எதிர்ப்பு பதிவுகளை உருக்குலைத்து பரப்புகின்றன என அவர் குற்றம் சாட்டினார்.
இந்தச் சம்பவம் பாகிஸ்தான் அரசியல் சூழலையும் இராணுவத்தின் பங்களிப்பையும் மீண்டும் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளது.
Read More : இனி ஈஸியாக லோயர் பெர்த் பெறலாம்..! மூத்த குடிமக்கள், கர்ப்பிணி பயணிகளுக்கு குட்நியூஸ் சொன்ன ரயில்வே..!



