புதுச்சேரியில் 2026-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு, புதுச்சேரியில் வெகு விமரிசையாக கொண்டாப்படுகிறது.. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பரிசு தொகுப்பு ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது.. பச்சரிசி, சர்க்கரை, கருப்பு ஆகியவற்றுடன் சில ஆண்டுகளில் ரொக்கத்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.. தமிழகத்தை போலவே புதுச்சேரியிலும் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் புதுச்சேரியில் 2026-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.. 4 கிலோ பச்சரிசி, நாட்டுச்சர்க்கரை, பாசிபருப்பு, 300 கிராம் நெய், 1 லிட்டர் சூரியகாந்தி எண்ணெய் ஆகியவை தரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. அரசு ஊழியர்கள், கௌரவ ரேஷன் அட்டைதாரர்கள் தவிர அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பரிசுத்தொகுப்பு தரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.. இந்த பரிசுத்தொகுப்பு வரும் ஜனவரி 3-ம் தேதி முதல் விநியோகம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



