இந்திய சினிமா வரலாற்றில் ஜாம்பவான்கள் என்று எடுத்துக்கொண்டால் அதில் தவிர்க்க முடியாத பெயர் ரஜினிகாந்த். இந்த சூப்பர் ஸ்டாருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். 75 வயதிலும், ரஜினி தொடர்ச்சியான படங்களில் நடித்து பிளாக்பஸ்டர்களைப் பெற்று வருகிறார். தனது தனித்துவமான நடிப்பு மற்றும் ஸ்டைல் மூலம் தனது திரை வாழ்க்கையில் பல பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்து பாக்ஸ் ஆபிஸ் கிங்காகவும் வலம் வருகிறார்.. பாக்ஸ் ஆபிஸில் ரஜினியின் மிகப்பெரிய வெற்றிப்படங்கள் குறித்து பார்க்கலாம்..
2.0:
2.0 (எந்திரன் 2) சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அதிக வசூல் செய்த படம். ஷங்கர் இயக்கிய இந்த படத்தில் பாலிவுட் ஹீரோ அக்ஷய் குமார் வில்லனாக நடித்தார். இந்த படம் ரூ.540 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு உலகளவில் ரூ.675 கோடி வசூல் செய்தது..
ஜெயிலர்:
அடுத்த இடத்தில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 2023 ஆம் ஆண்டு வெளியான பிளாக்பஸ்டர் திரைப்படமான ஜெயிலர் உள்ளது. இந்த படம் ரூ.180 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு ரூ.605 கோடி வசூல் செய்தது. இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணா, சிவராஜ்குமார் மற்றும் மோகன்லால் ஆகியோர் நடித்துள்ளனர்.
கூலி:
2025 ஆம் ஆண்டு வெளியான கூலி திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்தின் பட்ஜெட் ரூ.350-ரூ.400 கோடி.. கலவையான விமர்சனங்களை பெற்றாலும் இந்த படம் ரூ.517-ரூ.518 கோடி வசூலித்தது. இந்த படத்தில் நாகார்ஜுனா, சௌபின் ஷாஹிர், உபேந்திரா, அமீர் கான், ஸ்ருதி ஹாசன், சத்யராஜ் போன்ற முன்னணி பிரபலங்கள் முக்கிய வேடங்களில் நடித்தனர்.
கபாலி:
பா. ரஞ்சித் இயக்கிய கபாலி படத்தில் ராதிகா ஆப்தே ரஜினிக்கு ஜோடியாக நடித்தார்.. ரூ.120 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த திரைப்படம் உலகளவில் ரூ.295 கோடி வசூலித்தது. வெளிநாடுகளில் நன்றாக ஓடியது.
எந்திரன்:
2010 இல் வெளியான எந்திரன் படம் பல சாதனைகளை முறியடித்தது. இதை எஸ். ஷங்கர் இயக்கியுள்ளார். இதில் ஐஸ்வர்யா ராய் பச்சன் கதாநாயகியாக நடித்தார். இந்த திரைப்படம் ரூ.130 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு ரூ.290 கோடி வசூலித்தது.
வேட்டையன்:
டி.ஜே. ஞானவேல் இயக்கிய வேட்டையன் படத்தில் அமிதாப் பச்சன் ஒரு முக்கிய வேடத்தில் நடித்தார். கலவையான விமர்சனங்களை பெற்ற இந்தப் படம் ரூ.200 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு ரூ.255 கோடி வசூலித்தது.
பேட்ட:
கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய பேட்ட (2019) படத்தில் ரஜினிகாந்த், த்ரிஷா மற்றும் சிம்ரன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்தனர். இந்தப் படம் ரூ.135 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு ரூ.223 கோடி வசூலித்தது.
வரவிருக்கும் படங்கள்: ரஜினிகாந்த் தொடர்ச்சியாக படங்களில் நடித்து வருகிறார். கூலிக்குப் பிறகு, அவர் ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்கிறார். இது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் 2023 இல் வெளியான வெற்றிப் படமான ‘ஜெயிலர்’ படத்தின் தொடர்ச்சி ஆகும்.. கமல்ஹாசனின் ராஜ்கமல் தயாரிக்கும் படத்தில் ரஜினி நடிக்க உள்ளார்.. இந்த படத்தை சுந்தர் சி இயக்குவார் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் பின்னர் அவர் இந்த படத்தில் இருந்து விலகினார்.. இந்த படத்தை யார் இயக்குவார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது..
Read More : படையப்பா 2 கன்ஃபார்ம்..! படத்தின் டைட்டில் இதுதான்..! ரஜினியே கொடுத்த செம அப்டேட்..!



