குஜராத்தில் நிர்பயா வழக்கைப் போன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது. 7 வயது சிறுமி ஒருவர் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.. 35 வயது நபர் ஒருவர் சிறுமியை கொடூரமாக தாக்கியதுடன், அவரின் அந்தரங்க உறுப்புகளில் இரும்புக் கம்பியை செருகி உள்ளார்.. இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் ராஜ்கோட்டில் உள்ள அட்கோட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு கிராமத்தில் நடந்துள்ளது..
3 குழந்தைகளின் தந்தையான 35 வயது ராம்சிங் என அடையாளம் காணப்பட்ட குற்றவாளி, டிசம்பர் 4 ஆம் தேதி, சிறுமியின் பெற்றோர் பண்ணையில் வேலை செய்து கொண்டிருந்தபோது, அந்த சிறுமியை கடத்திச் சென்றார். அருகிலுள்ள ஒரு ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று, சிறுமியின் வாயை மூடி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
குற்றம் சாட்டப்பட்டவர் அச்சிறுமியின் அந்தரங்க உறுப்புகளில் ஒரு அடி நீள இரும்புக் கம்பியைச் செருகியதாகவும் கூறப்படுகிறது. தங்கள் மகள் காணாமல் போனதை உணர்ந்த அவளுடைய பெற்றோர், அவரை தேடத் தொடங்கினர்.. பின்னர் அந்த சிறுமி ரத்தப்போக்குடன் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.. அவர்கள் அவளை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர், அங்கு மருத்துவர்கள் அவளை ராஜ்கோட்டுக்கு பரிந்துரைத்தனர்.
ராஜ்கோட்டில் உள்ள அரசு குழந்தைகள் மருத்துவமனையில் சிறுமி சிகிச்சை பெற்று வருகிறார்.. சிறுமியின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
குற்றவாளியை போலீசார் எப்படிப் பிடித்தார்கள்?
மருத்துவமனை நிர்வாகம் பின்னர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தது.. வழக்கின் தீவிரத்தை கருத்தில் கொண்டு 10 குழுக்கள் அமைக்கப்பட்டன. அருகிலுள்ள கிராமங்களில் இருந்து சிசிடிவி காட்சிகளை போலீசார் சேகரித்து சரிபார்த்தனர். அந்தப் பகுதியில் எத்தனை மொபைல் போன்கள் செயல்பாட்டில் உள்ளன என்பதைக் கண்டறிய தொலைத்தொடர்பு நிறுவனங்களின் தரவுகளை மேலும் சரிபார்த்தனர்.
140 சந்தேக நபர்களின் பட்டியலை போலீசார் சேகரித்து விசாரணைக்கு அழைத்தனர். பின்னர் அவர்கள் பட்டியலை 10 நபர்களாகக் குறைத்து, ஒரு குழந்தை ஆலோசகர் மற்றும் பெண் போலீஸ் அதிகாரிகளின் உதவியுடன் பாதிக்கப்பட்டவருக்கு அவர்களின் புகைப்படங்களைக் காட்டி சிறுமியை சமாதானப்படுத்தினர்.
ராஜ்கோட் கிராமப்புற காவல் கண்காணிப்பாளர் (எஸ்பி) விஜய்சிங் குர்ஜார் இதுகுறித்து பேசிய போது “ போலீசாரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்ட ஒருவரை சிறுமி அடையாளம் கண்டார்.. விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்டவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். டிசம்பர் 4 ஆம் தேதி காலை 11 மணியளவில் வயலில் உள்ள தண்ணீர் தொட்டி அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றார். அவர் தோல்வியடைந்தபோது, அவர் கோபமடைந்து, இரும்பு கம்பியால் சிறுமியைக் காயப்படுத்தினார்,” என்று கூறினார்.
குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு 2 ஆண் குழந்தைகள், 1 பெண் குழந்தை, என 3 குழந்தைகள் உள்ளனர்.. அவர் மீது போக்சோ உள்ளிட்ட சட்டங்களின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Read More : 19 பேர் பலி; 16 பேர் காயம்; 2 கட்டிடங்கள் இடிந்து விழுந்து விபத்து! மொராக்கோவில் சோகம்!



