Flash : இன்று மட்டும் ரூ.2,000 உயர்ந்து புதிய உச்சம் தொட்ட விலை.. தங்கம் விலையும் உயர்வு.. நகைப்பரியர்கள் அதிர்ச்சி..!

gold silver rate

சென்னையில் இன்றும் ஆபரணத் தங்கம் விலை உயர்ந்துள்ளது.. அதே போல் வெள்ளி விலையும் அதிகரித்துள்ளது..

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. அந்த வகையில் தங்கம் விலை உயர்வதும், குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது..

இந்த நிலையில் சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை உயர்ந்துள்ளது.. அதன்படி இன்று தங்கம் விலை ஒரு கிராம் ரூ. 20 உயர்ந்து ரூ.12,050க்கு விற்பனையாகிறது. இதனால் ஒரு சவரனுக்கு ரூ. 160 உயர்ந்து ரூ.96,400க்கு செய்யப்படுகிறது.. இன்று நகைப்பிரியர்கள் மீண்டும் உயர்ந்துள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்..

அதே போல் இன்று வெள்ளி விலை உயர்ந்துள்ளது. அதன்படி இன்று காலை ஒரு கிராம் வெள்ளி ரூ.2 உயர்ந்து ரூ. 209க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு கிலோவுக்கு ரூ.2,000 உயர்ந்து ரூ.2,09,000க்கு விற்பனை செய்யப்படுகிறது..

Read More : நாடு முழுவதும் இனி ஆதார் பெயர் மாற்றத்திற்கு பான் கார்டு ஏற்கப்படாது…! வெளியான புதிய அறிவிப்பு…!

English Summary

The price of gold jewelry has increased in Chennai today as well. Similarly, the price of silver has also increased.

RUPA

Next Post

தமிழ்நாடு மருத்துவத் துறையில் 1,100 பணியிடங்கள்.. லட்சத்தில் சம்பளம்..!!விண்ணப்பிக்க இன்றே கடைசி தேதி..

Thu Dec 11 , 2025
1,100 vacancies in the medical sector in Tamil Nadu.. Salary in lakhs..!
tn govt jobs 1

You May Like