நேற்று மாலை ஒரு மருத்துவமனை மீது மியான்மர் இராணுவம் நடத்திய ஒரு கொடிய விமானத் தாக்குதலில், 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.. டிசம்பர் 28 ஆம் தேதி நடைபெற இருக்கும் தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன்பு, இந்த கொடிய தாக்குதலில் 31 பேர் உயிரிழந்தனர்.. 68 பேர் காயமடைந்தனர்.
2021 ஆம் ஆண்டில், பத்தாண்டுகால ஜனநாயக ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்த ராணுவ புரட்சிக்குப் பிறகு, கட்டுப்பாட்டை பலப்படுத்துவதற்காக ராணுவம் ஆண்டு தோறும் வான்வழி தாக்குதல்களை அதிகரித்து வருகிறது என்று மோதல் கண்காணிப்பாளர்கள் கூறுகின்றனர்.
சம்பவ இடத்தில் இருந்த உதவி ஊழியர் வை ஹுன் ஆங் இதுகுறித்து பேசிய போது “வங்கதேச எல்லையை ஒட்டியுள்ள மேற்கு ரக்கைன் மாநிலத்தில் உள்ள மராக்-யு பொது மருத்துவமனையில் புதன்கிழமை மாலை ஒரு இராணுவ ஜெட் குண்டுவீச்சு நடத்தியது..
நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. இப்போதைக்கு, 31 பேர் இறந்துள்ளனர் என்பதை நாங்கள் உறுதிப்படுத்த முடியும், மேலும் இறப்புகள் இருக்கும் என்று நாங்கள் நினைக்கிறோம். மேலும், 68 பேர் காயமடைந்துள்ளனர்.. இந்த எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கலாம்..” என்று தெரிவித்தார்..
டிசம்பர் 10 அன்று அரக்கான் இராணுவத்தின் (AA) சுகாதாரத் துறையின் அறிக்கை, இரவு 9:00 மணியளவில் நடந்த வான்வழித் தாக்குதலில் 10 மருத்துவமனை நோயாளிகள் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர் என்று கூறியது.
கருத்து தெரிவிக்க இராணுவ ஆட்சிக்குழுவின் செய்தித் தொடர்பாளரை உடனடியாகத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று ஏ.எஃப்.பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது..
அரக்கான் ராணுவம்
அரக்கான் ஆர்மி (AA) என்பது ரகைன் மாநிலத்தில் உள்ள ரகைன் இன சிறுபான்மையினரின் பிரிவினை ஆயுதப்படை குழு. 2021 ஆம் ஆண்டு ஜனநாயகத் தலைவர் ஆங் சான் சூ கீ தலைமையிலான அரசை வீழ்த்திய ராணுவ ஆட்சிக்கு முன்னரே செயல்பட்டு வந்த இந்தக் குழு, தற்போது இராணுவ ஜுன்டாவுக்கு எதிராக போராடும் மிக சக்திவாய்ந்த எதிர்ப்பு அமைப்புகளில் ஒன்றாக வளர்ந்துள்ளது.
AA தவிர, பிற இன சிறுபான்மை போராளிகள் மற்றும் ஜனநாயக ஆதரவாளர்களும் புரட்சிக்குப் பிறகு ஆயுதம் எடுத்தனர். ஆரம்பத்தில் சிதறியிருந்த இந்த கிளர்ச்சி குழுக்கள் அதிகாரத்திற்காக போராடிக் கொண்டிருந்த நிலையில், 2023 முதல் ஒரு கூட்டணியாக இணைந்து ஒருங்கிணைந்த தாக்குதலை முன்னெடுக்கத் தொடங்கினர்.
Read More : இந்த சிறிய நாட்டில் நீங்கள் 10,000 சம்பாதித்தால், இந்தியாவில் நீங்கள் கோடீஸ்வரர் ஆவது உறுதி.!



