யூனியன் பொது சேவை ஆணையம் (UPSC) தேசிய பாதுகாப்பு அகாடமி (NDA) மற்றும் கடற்படை அகாடமி (NA) தேர்வு 2026ற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டிற்கான தேர்வில் மொத்தம் 394 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ராணுவத்தில் சேர கனவு காணும் 12ம் வகுப்பு முடித்த மாணவர்கள் இவ்வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். விண்ணப்பங்களை டிசம்பர் 30 வரை சமர்ப்பிக்கலாம் என UPSC தெரிவித்துள்ளது.
NDA–NA தேர்வு என்றால் என்ன? யார் எழுதலாம்? இது இந்திய ராணுவத்தின் தரைப்படை (Army), கடற்படை (Navy), விமானப்படை (Air Force) துறைகளில் சேர விரும்புவோருக்கான முக்கிய தேசிய தேர்வு. ஒவ்வொரு ஆண்டும் UPSC இந்த தேர்வை நடத்துகிறது.
பதவிவாரியான காலிப்பணியிடங்கள்:
- தேசிய பாதுகாப்பு அகாடமி – 370 இடங்கள்
- கடற்படை அகாடமி – 24 இடங்கள்
- மொத்தம் – 394 இடங்கள்
- ஆண்களுக்கு – 370
- பெண்களுக்கு – 24
அகாடமிவாரியாக பணியிட விவரம் பின்வருமாறு:
தேசிய பாதுகாப்பு அகாடமி – ராணுவ பிரிவு
- ஆண்கள் – 198,
- பெண்கள் – 10
- மொத்தம்: 208
தேசிய பாதுகாப்பு அகாடமி – கடற்படை பிரிவு
- ஆண்கள் – 37,
- பெண்கள் – 5
- மொத்தம்: 42
தேசிய பாதுகாப்பு அகாடமி – விமானப்படை (பறக்கும் படை & தரைப்பணி)
- ஆண்கள் – 114,
- பெண்கள் – 9
- மொத்தம்: 123
கடற்படை அகாடமி
- ஆண்கள் – 21,
- பெண்கள் – 3
- மொத்தம்: 24
வயது வரம்பு: விண்ணப்பதார்கள் 01.07.2007 தேதிக்கு முன்னரும், 01.07.2010 தேதிக்கு பின்னரும் பிறந்திருக்கக்கூடாது. திருமணமாகாதவர்களாக இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி:
* இந்தியாவில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தின் கீழ் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
* Air Force மற்றும் Navy பிரிவுகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 12ஆம் வகுப்பில் கட்டாயமாக கீழ்கண்ட பாடங்களைப் படித்திருக்க வேண்டும்:
- இயற்பியல் (Physics)
- வேதியியல் (Chemistry)
- கணிதம் (Mathematics)
அதாவது Science group (PCM) படிப்புடையவர்களே இந்த இரு பிரிவுகளுக்கும் விண்ணப்பிக்கலாம்.
* இப்போது 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களும் NDA–NA தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்.
* பின்னர் SSB மற்றும் சேர்க்கை செயல்முறையின் போது அவர்கள் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம். மாணவர்கள் நல்ல உடல் தகுதி பெற்றிருப்பதும் அவசியமாகும்.
தேர்வு செய்யப்படும் முறை: ராணுவ அகாடமியில் சேர்வதற்கான தேர்வு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் வழியாக நடைபெறும். கணிதத் தேர்வு 300 மதிப்பெண்களுக்கும், பொது நுண்ணறிவு தேர்வு 600 மதிப்பெண்களுக்கும் நடைபெறும். மேலும் நேர்காணல் 900 மதிப்பெண்களில் நடத்தப்படும். அனைத்தும் கொள்குறி முறையில் நடைபெறும்.
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் முடிந்து தேர்வு செய்யப்படும் வேட்பாளர்கள் உடற்தகுதி மருத்துவப் பரிசோதனையையும் எதிர்கொள்ள வேண்டும். தேர்விற்கான பாடத்திட்டம் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வெளியிடப்பட்டுள்ளது.
பயிற்சி முடித்த பின்னர் தேர்வாகும் நபர்கள் ராணுவத்தில் முதல்கட்ட அதிகாரி பதவியில் நியமிக்கப்படுவார்கள். பயிற்சி முடிவில் பி.எஸ்சி, பி.டெக் பட்டங்களும் வழங்கப்படும். பயிற்சி காலத்தில் மாதாந்திரமாக ரூ.56,100 ஊதியமாக வழங்கப்படும்.
எப்படி விண்ணப்பிப்பது? ராணுவத்தில் சேர ஆர்வமாக உள்ளவர்கள் https://upsconline.nic.in/ என்ற இணையதளத்தில் முதலில் பதிவு செய்து, பின்னர் தேர்விற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.12.2025.
Read more: உங்களிடம் PF கணக்கு இருக்கிறதா..? இது இல்லையென்றால், சேவைகள் நிறுத்தப்படும்..! EPFO-ன் எச்சரிக்கை..!



