யார் இந்த ருன்ஜுன் ஷர்மா? சசி தரூருடன் நெருக்கமாக இருக்கும் மர்ம பெண்.. வைரல் போட்டோ!

sasi tharoor

காங்கிரஸ் எம்.பி. சசி தரூரின் புதிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.. இந்த புகைப்படம் 69 வயதான முன்னாள் தூதரும், அரசியல்வாதியுமான சசி தரூரின் கவர்ச்சி குறித்து மீண்டும் விவாதத்தை எழுப்பியுள்ளது. நீண்ட காலமாக இணையத்தில் பலரின் விருப்பமான நபராக இருக்கும் தரூர், இந்தப் புகைப்படத்தால் மீண்டும் கவனம் பெற்றுள்ளார்..


அந்த புகைப்படத்தில், சசி தரூர் ஒற்றை இருக்கை சோபாவில் அமர்ந்திருக்க, அவரது அருகில் பத்திரிகையாளர் ருன்ஜுன் ஷர்மா (RT India – Head of News) சோபாவின் கைப்பிடியில் அமர்ந்து, ஒரு கையை சசி தரூரின் தோளிலும் மற்றொரு கையை அவரது கையிலும் வைத்திருப்பது தெரிகிறது. இந்த நெருக்கமான போட்டோ, அதன் பின்னணி குறித்து சமூக ஊடகங்களில் பல்வேறு ஊகங்களையும் கருத்துகளையும் உருவாக்கியுள்ளது.

இந்தப் புகைப்படத்தை முதலில் ருன்ஜுன் ஷர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார். அதில் அவர், “பிரிட்டனுக்கு காலனித்துவக் கணக்குகளைச் சுமத்தி வந்தவர் திரும்பிவிட்டார். இந்த முறை மாஸ்கோவில்” என்ற பதிவிட்டிருந்தார்..

இதனைத் தொடர்ந்து, Rocket Scientist என்ற X (முன்னாள் ட்விட்டர்) பயனர் அந்தப் படத்தை பகிர்ந்து, சசி தரூரை நகைச்சுவை கலந்த முறையில் “வயதைக் கடந்த ரொமான்டிக், சொற்களுக்கான தொழிலதிபர், Wi-Fi சக்தியுடன் இயங்கும் நடமாடும் அகராதி” என்று வர்ணித்தார். இதனால் அந்தப் படம் மேலும் வைரலான நிலையில், நகைச்சுவை கலந்த விவாதங்கள் இணையத்தில் தொடங்கியது.

இந்த போட்டோ சசி தரூரின் தனித்துவமான ஆளுமை, மொழிப்புலமை மற்றும் கவர்ச்சி குறித்து சமூக வலைதளங்களில் மீண்டும் பேசப்பட காரணமாகியுள்ளது.

யார் இந்த ருன்ஜுன் ஷர்மா?

ருன்ஜுன் ஷர்மா ஒரு அனுபவம் வாய்ந்த மூத்த பத்திரிகையாளர். அவர் மாஸ்கோவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் RT (Russia Today) நிறுவனத்தின் தென்னாசிய செய்தியாளர்களில் மிகவும் வெளிப்படையாக கருத்து தெரிவிப்பவர்களில் ஒருவராக அறியப்படுகிறார். முக்கியமான உலக அரசியல், புவியியல் (geopolitical) நிகழ்வுகளை நேரடியாக அணுகி செய்தியளிப்பது அவரது தனிச்சிறப்பு. தற்போது அவர் RT India-வின் ஆசிரியர் நடவடிக்கைகளின் (editorial operations) தலைவராக பணியாற்றி வருகிறார்.

சமீபத்தில், அவரது நெட்வொர்க்கான RT India-க்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நேரடியாக ஆதரவு தெரிவித்தார். இதையடுத்து, இந்தியாவுக்கே சிறப்பாக உருவாக்கப்பட்ட ஒரு தனிப்பட்ட ஊடகமாக RT India செயல்பட தொடங்கியுள்ளது.

சோஷியல் மீடியா எதிர்வினைகள்

இந்தப் புகைப்படம் வைரலானதும், சமூக வலைதளங்களில் எதிர்வினைகள் ஒரே நேரத்தில் நகைச்சுவை மற்றும் பாராட்டாக மாறின.. ஒரு பயனர், “எனக்கு 29 வயதுதான்; ஆனால் 69 வயதில் சசி தரூருக்கு என்னைவிட அதிக கவர்ச்சி இருக்கிறது”
என்று கிண்டலாக பதிவிட்டார்.

மற்றொரு பயனர், சசி தரூரை நகைச்சுவையாக “Minister of Extramarital Affairs” என்று குறிப்பிட்டார். இன்னும் பலர், தரூரின் தனித்துவமான ஆரா, கவர்ச்சி மற்றும் நீண்டகால ஈர்ப்பை புகழ்ந்தனர்.

இந்தப் புகைப்படம் இணையத்தில் நகைச்சுவை, பாராட்டு, வியப்பு ஆகியவற்றின் பெரும் அலைகளை உருவாக்கியிருந்தாலும், சசி தரூரும் ருன்ஜுன் ஷர்மாவும் இந்த சமூக ஊடக பரபரப்பு குறித்து இதுவரை எந்த கருத்தையும் வெளியிடவில்லை.

RUPA

Next Post

30 நாட்கள் அசைவ உணவுகளை தவிர்த்தால் என்ன நடக்கும் தெரியுமா? உடலில் ஏற்படும் மாற்றங்கள்…!

Sat Dec 13 , 2025
நம்மில் பலர் அசைவ உணவு பிரியர்களாக இருக்கிறோம்.. ஆட்டிறைச்சி, கோழி, மீன் போன்ற உணவுகள் மிகவும் ஃபேவரைட் உணவுகளாக உள்ளன… இறைச்சி பல வழிகளில் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இது புரதத்தின் முழுமையான மூலமாகும். இது உடலுக்கு உள் மற்றும் வெளிப்படையாக பல நன்மைகளை வழங்குகிறது. இருப்பினும், பலர் இறைச்சி சாப்பிடுவதை நிறுத்த விரும்புகிறார்கள். ஆனால், அதை கைவிடுவதா வேண்டாமா என்று உறுதியாகத் தெரியாதவர்களும் இருக்கிறார்கள். அப்படியானால், நீங்கள் வழக்கமாக […]
non veg food

You May Like