சிவனும், முருகனும் இந்துக் கடவுளா? என்னுடன் விவாதிக்க தயாரா? சீமான் ஆவேசம்.!

seeman440867 1658466665 1679301482 1680611327

முருகனும் சிவனும் இந்து கடவுளா? இதுகுறித்து என்னுடன் விவாதிக்க தயாரா? என்று சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்..

நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது சிவனும் முருகனும் இந்து கடவுளா என கேள்வி எழுப்பினார்.. தொடர்ந்து பேசிய அவர் “ கடந்த ஆண்டும் திருப்பரங்குன்றம் அங்கே தானே இருந்தது.. அதே தீபம் ஏற்ற தூண் இருந்தது தான்.. அப்போது ஏன் அதைப் பற்றி பேசவில்லை.. இரண்டு மாதங்களில் தேர்தல் வருவதால் அதை பற்றி பேசுகின்றனர்.. எத்தனை இந்து வீடுகளில் பசி, பட்டினியால் விளக்கு எரியாமல் உள்ளது.. அந்த விளக்கை ஏற்ற வேண்டும் என நீ சிந்திக்கவில்லை.. மலை மீது விளக்கேற்ற வேண்டும் என்று கூறுகிறீர்கள்.


ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன்.. முருகனும் சிவனும் இந்து கடவுளா? இதுகுறித்து என்னுடன் விவாதிக்க தயாரா? முருகனும், சிவனும், பெருமாளும் இந்துவா? நீ கடவுளை மதம் மாற்றி வைத்துவிட்டாய். முருகன் இந்துவா? அது முருகனுக்கு தெரியுமா? யாராவது சொல்லுங்கள்.. முருகன் இந்துக் கடவுளா சைவக் கடவுளா? தேர்தல் வரும் போது உங்களுக்கு முருகன் மீது பாசம் வருகிறது.. இந்த கோயிலுக்குள் நடக்கும் திருட்டை கண்டுபிடிக்க வேண்டியது தானே.. அறநிலையத்துறையில் நடக்கும் ஊழலை கேட்க உனக்கு துணிவில்லை..

குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கிறான்.. திருப்பரங்குன்றத்தில் தான் முருகன் இருக்கிறானா? நாடு முழுவதும் இருக்கும் மலை எல்லாம் கல் குவாரியாக மாற்றும் போது நீ ஏன் போராட வரவில்லை? உனக்கு அரசியல் இல்லை.. சாதி, மதத்தை பிடித்துக் கொண்டு அழுகிறாய், மக்கள் பிரச்சனைக்கு ஏதாவது நின்றிருக்கிறாயா? மீனவர்கள் உரிமைக்காக, காவிரி நதி நீருக்கா வந்தாயா? அயோத்தியில் ராமர் கோவில் பிரச்சனை தற்போது தீர்ந்து விட்டதால் முருகனை தேடுகின்றனர்.. முருகன் எனக்கு இறைவன் இல்லை. முருகன் என் ரத்தம் என் இன கடவுள்.. எங்களுக்கு நீ முருகனை பற்றி சொல்லிக் கொடுக்கிறாயா? எதை வைத்து அரசியல் செய்வது என தெரியவேண்டாமா? தமிழகத்தில் உள்ள இஸ்லாமியர்கள் அனைவரும் என் சொந்தம்.. வழிபாடு செய்யும் தெய்வத்தை வைத்து அரசியல் செய்யக் கூடாது..” உனக்கு உண்மையிலேயே பக்தி இருந்தால் கடந்த ஆண்டு திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றியிருக்கலாமே? பிரச்சனையை உண்டாக்கி அரசியல் செய்ய வேண்டும் என நினைக்கிறீர்கள்..” என்று தெரிவித்தார்..

Read More : அதிமுகவிடம் 70 தொகுதிகளின் லிஸ்டை கொடுத்த பாஜக? இபிஎஸ் சொன்ன பதில்! பரபரக்கும் தேர்தல் களம்!

RUPA

Next Post

முன்கூட்டியே வெளியேறிய மெஸ்ஸி; ஆத்திரத்தில் கொல்கத்தா மைதானத்தை சூறையாடிய ரசிகர்கள்; சேர், பாட்டில்களை வீசி ரகளை..!

Sat Dec 13 , 2025
கொல்கத்தாவின் சால்ட் லேக்கில் உள்ள யூபா பாரதி கிரீரங்கன் (Salt Lake Stadium) மைதானத்தில், உலகப் புகழ்பெற்ற அர்ஜென்டினா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியின் GOAT இந்தியா சுற்றுப்பயணத்தின் முதல் கட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வின் போது மெஸ்ஸியை நேரில் பார்க்க முடியாததால், பார்வையாளர்கள் ஒரு பகுதி கட்டுப்பாட்டை இழந்து கலவரத்தில் ஈடுபட்டனர். சனிக்கிழமை அதிகாலை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மெஸ்ஸியை நன்றாக காண முடியவில்லை என்ற ஏமாற்றம் […]
messi stadium

You May Like