FLASH | கூண்டோடு ராஜினாமா..!! தவெகவில் இணைந்த 500 பேர்..!! கதிகலங்கி போன திமுக, அதிமுக..!!

TVK 2025

தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தை மற்றும் மாற்று கட்சியினரை தங்கள் பக்கம் இழுக்கும் பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன. குறிப்பாக, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் கடந்த சில நாட்களாக அதிமுக மற்றும் அதிமுகவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் உட்பட பலரும் இணைந்து வருகின்றனர்.


சமீபத்தில், அதிமுக-வின் மூத்த தலைவரான செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைந்த நிகழ்வுக்குப் பிறகு, விஜய்யின் கட்சியில் இணைவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தச் சூழலில், 2026 தேர்தலை இலக்காக வைத்து, புதிய உறுப்பினர்களைச் சேர்க்கும் பணியில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஈடுபட்டுள்ளன.

அதன் ஒரு பகுதியாக, நாகை மாவட்டத்திலும் தவெக தனது பலத்தை கூட்டி வருகிறது. தி.மு.க., அ.தி.மு.க., தே.மு.தி.க. மற்றும் மனிதநேய ஜனநாயக கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து விலகிய சுமார் 500-க்கும் மேற்பட்டவர்கள், நாகை மாவட்ட செயலாளர் சுகுமாரன் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளனர். மேலும், அவர்கள் அனைவரும் விஜய்யை நேரில் சந்திக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Read More : BREAKING | நல்லகண்ணுவுக்கு என்ன ஆச்சு..? மருத்துவமனையில் கவலைக்கிடம்..!! மருத்துவர்கள் தீவிர சிகிச்சை..!!

CHELLA

Next Post

FLASH | சண்டே அதுவுமா இப்படியா..? புதிய உச்சம் தொட்ட முட்டை விலை..!! அதிர்ச்சியில் பொதுமக்கள்..!!

Sun Dec 14 , 2025
தமிழ்நாட்டின் முட்டை உற்பத்தியின் முக்கிய மையமான நாமக்கல் மண்டலத்தில், முட்டை விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஏற்றுமதியின் தேவை அதிகரிப்பு மற்றும் உள்ளூர் உற்பத்தியின் குறைவு போன்ற காரணங்களால், கடந்த சில நாட்களாக முட்டை விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நாமக்கல் மண்டலத்தில் உள்ள சுமார் 1,100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகளில் தினசரி சராசரியாக 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த முட்டைகள் தமிழ்நாடு […]
egg 2025 1

You May Like