மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பவர்கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (POWERGRID) நிறுவனத்தில், நிறுவன செயலாளர் (Company Secretary) பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காலிப்பணியிடங்கள் – 48
ஒதுக்கீடு: இப்பணியிடங்கள் பொதுப்பிரிவு – 21, ஒபிசி – 12, எஸ்சி – 7, எஸ்டி – 4, EWS – 4, மாற்றுத்திறனாளிகள் – 6, முன்னாள் ராணுவத்தினர் – 6 என நிரப்பப்படுகிறது.
வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் அதிகபட்சமாக 29 வயதிற்குள் இருக்க வேண்டும். அதே நேரத்தில், அரசு விதிமுறைகளின்படி சில பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது.
வயது வரம்பில் வழங்கப்படும் தளர்வுகள்:
- ஒபிசி (NCL) பிரிவினருக்கு: 3 ஆண்டுகள்
- எஸ்சி / எஸ்டி பிரிவினருக்கு: 5 ஆண்டுகள்
- மாற்றுத்திறனாளிகள் (PwBD): மத்திய அரசு விதிமுறைகளின் படி உச்ச வயது வரம்பு நிர்ணயம்
- இவ்விதமாக, சமூகப் பிரிவுகளை அடிப்படையாகக் கொண்டு வயது வரம்பில் தளர்வுகள் வழங்கப்படுவதாக பவர்கிரிட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கல்வித்தகுதி: விண்ணப்பதார்கள் இந்திய நிறுவன செயலாளர்கள் நிறுவனம் (ICSI) இணை உறுப்பினர் (Associate Member) தகுதியை பெற்றிருக்க வேண்டும். மேலும், ஏதேனும் ஒரு நிறுவனத்தில் குறைந்தபட்சம் 1 வருடம் நிறுவன செயலாளராக பணியாற்றி இருக்க வேண்டும். பயிற்சி காலங்கள் அனுபவமாக எடுத்துகொள்ளப்படாது.
சம்பளம்: அதன்படி, இந்த பதவிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.30,000 முதல் ரூ.1,20,000 வரை சம்பளமாக வழங்கப்படும். இதில், அடிப்படை சம்பளம் ரூ.30,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், அதற்கு மேலாக கொடுப்பனைகள் மற்றும் அகவிலைப்படி (DA) ஆகியவை சேர்த்து அடிப்படை சம்பளத்தின் 35 சதவீதம் வரை வழங்கப்படும். இதன் அடிப்படையில், வருடாந்திரமாக ஒருவருக்கு தோராயமாக ரூ.9.96 லட்சம் வரை வருமானம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை: மத்திய அரசின் மின்சாரத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் பவர்கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் அறிவிக்கப்பட்டுள்ள நிறுவன செயலாளர் (Company Secretary) பணியிடங்கள் ஒப்பந்த முறையில் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு எதுவும் நடத்தப்படாது. விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் (Interview) மட்டுமே தேர்வு முறையாக இருக்கும். விண்ணப்பித்த நபர்களில் இருந்து, தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நேர்காணலுக்கு தகுதியானவர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.
நேர்காணலில் தேர்ச்சி பெற, பொதுப் பிரிவினர் குறைந்தபட்சம் 40 சதவீதம் மதிப்பெண்கள் பெற வேண்டும். ஒபிசி, எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் குறைந்தபட்சம் 30 சதவீதம் மதிப்பெண்கள் பெற வேண்டும். மேலும், தேர்வு செய்யப்படும் நபர்கள் நிறுவனத்தின் மருத்துவ தகுதி விதிமுறைகளை பூர்த்தி செய்திருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எப்படி விண்ணப்பிப்பது? விண்ணப்பிக்க தகுதியுள்ளவர்கள் அவர்கள் விவரங்களை கொண்டு https://powergrid.in/index.php/en/job-opportunities என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.12.2025.
Read more: உஷார்..! சருமத்தில் இந்த அறிகுறிகள் தோன்றினால்.. அது இதய நோயாக இருக்கலாம்..! அலட்சியப்படுத்தாதீங்க!



