முத்துவை சீண்டிய அருண்.. பளார் விட்ட அண்ணாமலை.. மீனாவுக்கு இது தேவையா..? சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்..

siragadikkaaasaiserial 2025 11 28t094326 894 1764303319

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோட்டில், சத்தியாவும் சிந்தாமணியின் மகளும் பைக்கில் ஒன்றாக வருகின்றனர். அதை பார்த்ததும் சிந்தாமணிக்கு ஜோசியர் சொன்னது ஞாபகத்துக்கு வருகிறது. உடனே சிந்தாமணி தனது மகளிடம் ஏன் இப்படி கண்ட பசங்க கூட வர? கார் புக் பண்ணி வர வேண்டியதுதானே என்று கேட்கிறார். அதற்கு நம்ம கம்பெனியில் வேலை பார்க்கிறவங்க தான் என்று சொல்ல, ஆனாலும் சிந்தாமணி யாராயிருந்தாலும் அடுத்தவங்க தான் என்று அதட்டுகிறார்.


அடுத்ததாக பார்வதி வீட்டிற்கு வந்த சிந்தாமணி விஜயாவுடன் சேர்ந்து கிரிஷை வெளியேற்ற திட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார். இதை கேட்ட பார்வதி கடும் கோபத்தில் நீ அந்த பையனை வீட்டை விட்டு வெளியே அனுப்பினால் உன் கை கால் இழுத்துக்கும் என்று சொல்ல, விஜயா பயந்து போய் பிளானை கைவிடுகிறார்.

அடுத்ததாக அருணும் அவருடைய நண்பரும் டீ குடித்துக் கொண்டிருக்கின்றனர். அப்போது முத்துவும் செல்வமும் அங்கு வருகின்றனர். முத்துவை வெறுப்பேற்ற அருண் திட்டம் தீட்டுகிறான். ஜாடை மாடையாக கல்யாணம் ஆகி இரண்டு வருஷம் ஆச்சு. குழந்தை பெத்துக்க வக்கில்லை அதனாலதான் இன்னொரு குழந்தையை தத்தெடுக்கக்கிறாங்க. ஆம்பலையானு ஹாஸ்பிடல் போய் செக் பண்ணு என்றெல்லாம் பேசுகிறான். இதனால் கடுப்பான முத்து அருணிடம் சண்டைக்கு போகிறார்.

அந்த நேரத்தில் அண்ணாமலை அந்தப் பக்கமாக வர இருவரும் சண்டை போட்டுக் கொண்டிருப்பதை பார்த்து முத்துவை அறைந்து விடுகிறார். வீட்டிற்கு வந்த முத்துவிடம் நீ ஏன் அருணுடன் சண்டை போட்ட என்று அண்ணாமலை கேட்க, காரணம் மீனாதான் என்று சொல்கிறார். எல்லாரும் என்னாச்சு என்று கேட்க, கிரிஷை முதலில் பார்க்கும்போது என்னை மாதிரியே இருக்குனு அந்த பையனை தத்தெடுக்கணும்னு சொன்னது மீனாதான்.

ஆனால் இப்போ அவனை தத்தெடுக்க வேண்டாம் என்று சொல்லுகிறார். அதனால் தான் அதற்கான காரணத்தை கேட்க சொல்லி நான் சீதாவிடம் சொன்னேன். சீதா அருணிடன் சொல்லி இருக்கிறா. அவன் என்னை அசிங்கப்படுத்தி பேசுறான் என்று வருத்தப்பட்டு கூறுகிறான். இதை கேட்டு உண்மையை சொல்ல முடியாமல் மீனா குற்ற உணர்ச்சியில் தவிக்கிறாள்.

Read more: 13 பேர் பலி; 25 பேர் காயம்; தொடர் வாகன விபத்து; பேருந்துகள் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு!

English Summary

Arun who betrayed Muthu.. Annamalai who left Palar.. Does Meena need this..? Sirakatika Asai serial update..

Next Post

SIR-க்கு பின் மேற்கு வங்கத்தில் 58 லட்சம் பெயர்கள் நீக்கம்: 24 லட்சம் பேர் இறந்தவர்கள், 12 லட்சம் பேர் காணாமல் போனவர்கள்.!

Tue Dec 16 , 2025
பீகார் தேர்தலுக்கு பின், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (Special Intensive Revision – SIR) பணியின் 2-ம் கட்ட செயல்முறையை தேர்தல் ஆணையம் தொடங்கி உள்ளது.. அந்த வகையில் கடந்த மாதம் 4-ம் தேதி முதல் தமிழ்நாடு, புதுச்சேரி, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR நடவடிக்கை மாநிலங்களில் தொடங்கி நடைபெற்றது. வீடு வீடாக கணக்கீட்டுப் படிவம் விநியோகம் செய்வது, அதை பூர்த்தி செய்து பெறுவது, […]
mamtha ec 1

You May Like