திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் தனது பாரம்பரிய தொகுதியான கரூரிலிருந்து மாறி வேறு ஒரு தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
செந்தில் பாலாஜி 2021 சட்டமன்றத் தேர்தலில் கரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால், இம்முறை அவர் கொங்கு மண்டலத்தில் கட்சியை மேலும் பலப்படுத்த, கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிட திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இதற்கு முக்கியக் காரணம், கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில், கோவையில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளையும் அதிமுக கூட்டணி முழுமையாகக் கைப்பற்றியதுதான். கொங்கு மண்டலத்தில் திமுக-வின் கரங்களை வலுப்படுத்துவது மற்றும் கோவையில் அதிமுக-வின் ஆதிக்கத்தை முறியடிப்பது என்ற இலக்குடன், தி.மு.க. தலைமை இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.
மேற்கு மண்டலத்தின் முக்கியப் பொறுப்பாளராக இருக்கும் செந்தில் பாலாஜி, கோவை போன்ற சவால் நிறைந்த தொகுதியில் களமிறங்கினால், அது ஒட்டுமொத்த மேற்கு மண்டலத் தேர்தல் களத்திலும் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
Read More : பெண்களே மிஸ் பண்ணிடாதீங்க..!! ரூ.1,000 உரிமைத்தொகைக்கு ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம்..!!



