ஈரோடு வரும் விஜய்க்கு செங்கோட்டையன் வைத்திருக்கும் சர்ப்ரைஸ்.. யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்..!

Vijay Sengottaiyan 2025

தவெக சார்பில் இன்று ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே சுங்கச்சாவடி சரளையில் உள்ள விஜயபுரி அம்மன் கோவில் திடலில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. விஜய் கட்சியில் செங்கோட்டையன் இணைந்த பின்னர் நடைபெறும் முதல் பொதுக்கூட்டம் என்பதால், கொங்கு மண்டலத்தில் தனது அரசியல் பலத்தை வெளிப்படுத்தும் வகையில் அவர் இந்த நிகழ்ச்சியை மிகப் பெரிய அளவில் ஏற்பாடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.


மேலும், இந்தக் கூட்டத்தில் விஜய் குறைந்தது 30 நிமிடங்கள் உரையாற்ற வேண்டும் என செங்கோட்டையன் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்றைய கூட்டத்தில் பிற கட்சிகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மற்றும் சில முன்னாள் அமைச்சர்கள் விஜய் முன்னிலையில் தவெகவில் இணையக்கூடும் என்ற தகவலும் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை செங்கோட்டையன் ரகசியமாக வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, “பொறுத்திருந்து பாருங்கள்” என்ற பதிலுடன் அவர் அங்கிருந்து சென்றார். ஏற்கனவே அதிமுகவிலிருந்து பல முன்னாள் அமைச்சர்களை தவெகவில் இணைத்து கட்சியை வலுப்படுத்த உள்ளதாக செங்கோட்டையன் நிர்வாகிகள் மத்தியில் பேசியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால், இன்று நடைபெறும் இந்த பொதுக்கூட்டத்தில் சில முக்கிய அரசியல் பிரமுகர்கள் தவெகவில் இணையும் வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், விஜய் முக்கிய அரசியல் அறிவிப்புகளை வெளியிடலாம் என்பதால், கட்சியினரிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. கரூர் சம்பவத்துக்குப் பிறகும், செங்கோட்டையன் தவெகவில் இணைந்த பிறகும் நடைபெறும் இந்த பொதுக்கூட்டம், அரசியல் ரீதியாக மிகுந்த முக்கியத்துவம் பெற்ற நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

Read more: ஊரை விட்டு ஓட்டம் பிடித்த கள்ளக்காதல் ஜோடி..!! காட்டுக்குள் காத்திருந்த பேரதிர்ச்சி..!! நேரில் பார்த்து ஆடிப்போன மக்கள்..!!

English Summary

Sengottaiyan’s surprise for Vijay, who is coming to Erode.. A twist that no one expected..!

Next Post

குளிர்காலத்தில் முடி உதிர்வால் கவலையா..? கூந்தலை பாதுகாக்க இதோ சில மேஜிக் டிப்ஸ்..!!

Thu Dec 18 , 2025
பனிக்காலம் தொடங்கினாலே சருமத்தைப் போலவே நமது கூந்தலும் பல சவால்களை சந்திக்கிறது. வறண்ட காற்றும், காற்றில் நிலவும் ஈரப்பத குறைவும் உச்சந்தலையை எளிதில் வறட்சியடைய செய்கின்றன. இதனால் பொடுகுத் தொல்லை அதிகரிப்பதோடு, முடியின் வேர்கள் பலமிழந்து முடி உதிர்தல் (Hair Fall) ஒரு பெரும் புகாராக மாறுகிறது. இதுமட்டுமின்றி, குளிருக்காக நாம் பயன்படுத்தும் அதிகப்படியான வெந்நீரும் கூந்தலின் இயற்கை எண்ணெய் பசையை நீக்கி, பாதிப்பை தீவிரப்படுத்துகிறது. இந்தச் சிக்கல்களில் இருந்து […]
Hair Care Tips

You May Like