திமுக ஒரு தீய சக்தி.. பல முறை ஆக்ரோஷமாக கர்ஜித்த விஜய்.. இந்த முறை தீய சக்திக்கும் தூய சக்திக்கும் தான் போட்டி என ஆவேசம்..!

tvk vijay n 2

தவெக தலைவர் விஜய் இன்று ஈரோட்டில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார்.. திமுகவை கடுமையாக விமர்சித்த அவர் “எம்.ஜி.ஆரும், ஜெயலலிதா மேடமும் ஒரே வார்த்தையில் திமுகவை காலி செய்தனர்.. ஏன் இவ்வளவு கடுமையாக விமர்சிக்கிறார்கள் என்று யோசிப்பேன்.. அவர்கள் சொன்னதையே நானும் சொல்கிறேன்.. திமுக ஒரு தீய சக்தி என பல முறை ஆக்ரோஷமாக முழங்கினார் விஜய்.. திமுக தீய சக்தி என ஜெயலலிதா கூறியது சரிதான்..


தொடர்ந்து பேசிய அவர் தவெக ஒரு தூய சக்தி.. தீய சக்தியான திமுகவுக்கும் தூய சக்திக்கும் தான் போட்டியே.. அண்ணன் செங்கோட்டையன் நம்முடன் வந்து சேர்ந்தது நமக்கு பெரிய பலம்.. அவரை போலவே இன்னும் பலர் நம்முடன் வந்து இணைய உள்ளனர்.. அவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும்..

சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் ‘என் கேரக்டரையே புரிந்து கொள்ள மாட்டிகிறீர்கள்’ என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.. அவர் பேசினது சினிமா டயலாக் இல்லையாம்.. அது என்ன சிலப்பதிகாரத்தில் இருந்து எடுத்ததாம். நான் ஏதாவது சொன்னால் சினிமா டயலாக் என்று சொல்கின்றனர்..

உங்களை எப்படி புரிந்துகொள்ள வேண்டும் என்று நாங்கள் புரிந்துகொள்வது? சட்டம் ஒழுங்கில் நாடே சந்தி சிரிக்குதே அதுலயா? பெண்கள் பாதுகாப்பில் நாடே சந்தி சிரிக்குதா? பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து ஏமாற்றி ஆட்சிக்கு வந்தீர்களே? அதுலயா? எதில் உங்கள் கேரக்டரை புரிந்துகொள்ள வேண்டும்.. ஆனா திமுகவும் சரி.. பாஜகவும் சரி, முதலில் என்னோட கேரக்டரை புரிந்துகொள்ள வேண்டும்.. 2026 தேர்தல் என் கேரக்டரே வேற மாதிரி சார்.. அதை தயவுசெய்து நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.. இல்லை என்றால் மக்களே புரிய வைப்பார்கள்.. நம்பிக்கையுடன் இருங்க சார்.. நல்லதே நடக்கும்..

என்னை முடக்கலாம் என்று நினைக்கிறீர்கள்.. ஆனால் இந்த சத்தத்தை ஒருநாளும் உங்களால் முடக்க முடியாது.. மக்கள் விரோத திமுகவை மக்கள் சக்தியால் தான் வீழ்த்த முடியும்.. நண்பா, நண்பிகளே பத்திரமாக வந்து, பத்திரமாக போங்க.. எனக்கு எல்லாவற்றையும் விட நீங்கள் தான் முக்கியம்.. “ என்று தெரிவித்தார்..

Read More : “என்ன கேட்பதற்கு ஆள் இல்லன்னு நினைச்சீங்களா? மக்களுக்கு ஒன்று என்றால் நான் வந்து நிற்பேன்..” விஜய் ஆவேசம்..!

RUPA

Next Post

தவெக ஒரு கொலைகார சக்தி.. விஜய்யின் தீய சக்தி விமர்சனத்திற்கு திமுக பதிலடி..!

Thu Dec 18 , 2025
திமுகவை தீய சக்தி என்ற விமர்சனத்திற்கு திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன் பதிலடி கொடுத்துள்ளார்.. தவெக தலைவர் விஜய் இன்று ஈரோட்டில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார்.. திமுகவை கடுமையாக விமர்சித்த அவர் “எம்.ஜி.ஆரும், ஜெயலலிதா மேடமும் ஒரே வார்த்தையில் திமுகவை காலி செய்தனர்.. ஏன் இவ்வளவு கடுமையாக விமர்சிக்கிறார்கள் என்று யோசிப்பேன்.. அவர்கள் சொன்னதையே நானும் சொல்கிறேன்.. திமுக ஒரு தீய […]
tvk vijay vs tks elangovan

You May Like