ஈரோடு மக்கள் சந்திப்பு இதுவரை இல்லாத மகிழ்ச்சி, நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.. நன்றி தெரிவித்து விஜய் பதிவு..!

vijay 2

ஈரோட்டில் இன்று தவெக தலைவரின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.. இந்த நிகழ்ச்சியில் பேசிய விஜய் திமுக மீதான எதிர்ப்பை மேலும் கூர்மைப்படுத்தி பேசினார்.. ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் பாணியில் திமுகவை தீயசக்தி என்று விமர்சித்திருந்தார்.. மேலும் களத்தில் இருப்பவர்களை மட்டும் தான் விமர்சிப்பேன் என்றும் விஜய் பேசியிருந்தார்.. இதன் மூலம் அதிமுக இடத்தில் தவெகவை வைத்து பேசுகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.


நிகழ்ச்சியில் அக்கட்சி தலைவர் விஜய் இந்த நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்தவர்களுக்கு விஜய் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ என் நெஞ்சில் குடியிருக்கும் உங்கள் அனைவருக்கும் என் அன்பான வணக்கம். எப்போதும், என் வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் நீங்கள் உடன் வருகிறீர்கள். நீங்கள் காட்டும் எல்லையில்லா அன்பினாலும் ஆதரவினாலும் பெரும் உத்வேகம் அடைந்து வருகிறேன். இந்த உத்வேகமே எனக்கு எப்போதும் மிகப் பெரிய உந்துசக்தியாக இருக்கிறது.

எத்தனை அரசியல் கட்சிகள், எத்தனை ஆண்டுக்காலம் நம்மை ஆண்டாலும், வறுமையின் பிடியில் சிக்கியுள்ள என் அன்புக்கு உரியவர்களாகிய உங்களுக்கு ஒரு விடிவு காலம் கண்டிப்பாக வரவேண்டும். ஏக்கத்திலேயே, கனவுகளிலேயே காலங்கள் கடந்து போய்விடக் கூடாது. எனவே தான், வளர்த்து ஆளாக்கிய உங்களோடு இணைந்து உங்களுக்காக உழைக்கவே நாம் நம் அரசியல் பயணத்தைத் தொடங்கினோம்.

அந்தப் பயணத்தில், உங்களைச் சந்திப்பதற்கு நாம் புறப்பட்டதில் இருந்தே எவ்வளவோ தடைகள் தொடர்ந்து நமக்கு வந்தவண்ணம் இருந்தன. அவற்றில் உங்களுக்குத் தெரிந்தவை பல. உங்களுக்குத் தெரியாதவை பல. ஆனால், அவற்றையெல்லாம் உங்களின் பேராதரவு மற்றும் தூய அன்பின் துணையோடு முறியடித்து வெற்றி அடைந்து வருகிறோம். உங்களுடனான சந்திப்பைத் தொடர்ந்து நிகழ்த்தி வருகிறோம்.

அந்த வகையில் இன்று மஞ்சள் மாநகரான ஈரோட்டில் நடைபெற்ற நமது சந்திப்பானது, வாழ்நாளில் இதுவரை இல்லாத வகையில் மிகுந்த மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது. இந்தச் சந்திப்பில், அளப்பரிய அன்பும் ஆதரவும் அளித்த, என் நெஞ்சில் குடியிருக்கும் உங்கள் அனைவருக்கும் எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது.

இந்த நெகிழ்ச்சிமிகு சந்திப்பை, மிகப் பிரம்மாண்டமாகவும் மிகுந்த பாதுகாப்புடனும் மெச்சத் தகுந்த வகையிலும் ஏற்பாடு செய்திருந்த நம் கழகத்தின் நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர் அண்ணன் திரு. கே.ஏ.செங்கோட்டையன் அவர்களுக்கும், அவருக்கு உறுதுணையாக இருந்த நம் கழகப் பொதுச் செயலாளர் திரு. ஆனந்த் அவர்களுக்கும், மாநில நிர்வாகிகளுக்கும், ஈரோடு மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் திரு. M.பாலாஜி http://B.Com, ஈரோடு கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு. M.வெங்கடேஷ் B.E., MBA, ஈரோடு மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு. A.பிரதீப்குமார் DCE ஆகியோருக்கும் கழகத்தின் அனைத்து நிர்வாகிகளுக்கும், தன்னார்வலர்களுக்கும் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு உள்ளிட்டவற்றைச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த காவல் துறைக்கும் எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்..” என்று பதிவிட்டுள்ளார்..

RUPA

Next Post

இந்த நாளில் தெரியாமல் கூட துடைப்பம் வாங்காதீங்க! லட்சுமி தேவியின் அருள் வேண்டுமானால், இந்தத் தவறைச் செய்யாதீங்க!

Thu Dec 18 , 2025
வாஸ்து சாஸ்திரத்தின்படி, ஒரு வீட்டில் உள்ள ஒவ்வொரு சிறிய பொருளுக்கும் ஒரு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. ஒரு வீடு என்பது வசிப்பதற்கான இடம் மட்டுமல்ல, அது நமது மனம், ஆரோக்கியம் மற்றும் நிதி நிலையை பாதிக்கும் ஒரு ஆற்றல் மையம் என்று வாஸ்து வல்லுநர்கள் கூறுகின்றனர். அதனால்தான், வீட்டின் அமைப்பு மட்டுமல்லாமல், வீட்டில் பயன்படுத்தப்படும் பொருட்கள், அவை வைக்கப்படும் இடம் மற்றும் அவை பயன்படுத்தப்படும் விதம் ஆகியவையும் மிகவும் முக்கியமானவை.அத்தகைய […]
broom 2

You May Like